Skip to main content

Advertisement

சவால்களை புறந்தள்ளி தங்கம் வென்ற கீத்தா !

 

அண்மையில் நடந்து முடிந்த சுக்மா விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, ஓட்டப்பந்தய வீராங்கனை கீத்தா சிவராஜா, சிறு சிறு சவால்களை எதிர்கொண்டுள்ளார் !

மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை, நாடு கடந்தும், மாநிலம் கடந்தும் பல போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றதால், காயம் ஏற்படாமல் தனது உடற்தகுதியைப் பேணிக்கொள்வதே சவாலாக இருந்ததாகக் கீத்தா கூறினார்.

இவ்வேளையில், ஆசிய பல்கலைக்கழக போட்டியில், பதக்கங்களை வெல்வதே தனது அடுத்த இலக்கு, என்றாரவர்.

இந்த சுக்மாவில், கீத்தா, ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

3 சுக்மா போட்டிகளில் பங்கேற்ற பதக்கங்களை வென்ற கீத்தாவுக்கு, இதுவே கடைசி சுக்மா போட்டியாகும்.

சுக்மா என்பது, 21 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் போட்டியாகும்.

----------

இவ்வேளையில், சுக்மா போட்டியில் தங்கம் வென்ற இன்னோர் ஓட்டப்பந்தய வீரர் போவன் குமாரும், தனது மகிழ்ச்சியை Astro Audio செய்திப் பிரிவிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் !

இந்த வெற்றிப் பயணத்தில், தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமக்கு பெரும் ஆதரவாக இருந்ததாக போவன் கூறினார்.

இதோடு நின்றுவிடாமல், அடுத்தாண்டு சீ விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெறுவதே, தனது தலையாய இலக்காக வைத்திருப்பதாக, ஜொகூரைச் சேர்ந்த அந்த இளம் வீரர், Astro Audio செய்தி பிரிவிடம் பகிர்ந்து கொண்டார்.

----------

Inter Milan-னுக்கு எதிரான நாளைய, முதல் Champions League ஆட்டத்தில், Real Madrid-டின் சில முக்கிய வீரர்கள் களமிறக்கப்படமாட்டார்கள் !

Eduardo Camavinga, Arda Guler, Bernardo Silva ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

கடந்த பருவத்தில் பெற்ற இடைநீக்கத் தண்டனையை அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதே  அதற்குக் காரணம்.

Real Madrid - Inter Milan மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

RAAGA Aaha Siranta Isai!