Skip to main content

Advertisement

Hoo Pang Ron- Lai Pei Jing ஒலிம்பிக் இலக்கு !

 

சீன மாஸ்டர் பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Hoo Pang Ron- Lai Pei Jing, இரண்டாம் நிலை வெற்றியாளராகிய்யதுப், சிறந்த சாதனையாகப் பார்க்கப்படுகிறது !

கடந்த மே மாதமே இணைந்து விளையாடத் தொடங்கிய அவர்கள், குறுகிய காலத்திலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பதே, அதற்குக் காரணம்.

அதுமட்டுமின்றி, இந்த வெற்றி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி வாய்ப்பைப் பெறும் அவர்களின் இலக்கையும், மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே தங்களது முக்கிய இலக்கு என Pang Ron கூறினார்.

எனினும், அதற்காக தங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், படிப்படியாக ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

---------

தேசிய ஆடவர் ஒற்றையர் பூப்பந்து வீரர் Leong Jun Hao, தனது ஆட்டத்திறனை மீட்டெடுக்க, இன்னும் அதிக காலம் இல்லை என, முன்னாள் தேசிய வீரர் Datuk Seri Lee Chong Wei எச்சரித்துள்ளார் !

பயிற்சியின் போது Jun Hao-வின் ஆட்டமுறை சிறப்பாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், 27 வயதான அவர் தற்போதைய சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என, மலேசிய பூப்பந்து சங்கத்தின் செயல்திறன் குழுத் தலைவரான Chong Wei கூறினார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியே, Jun Hao-வுக்கு, ஒலிம்பிக் கனவை நனவாக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பருவத்தில் அவர் களமிறங்கிய பல போட்டிகளில், காலிறுதிக்கு முன்னேறத் தவறியது குறிப்பிடத்தக்கது.

-------

சிலாங்கூர் பாரா சுக்மா விளையாட்டுப் போட்டி, காற்றுத் தரக் குறியீடு 200-ரை எட்டினால், அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்படும் !

புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள், வீரர்கள் மற்றும் அதிகாரிகளைப் பாதிக்கக்கூடும் என்பதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வீரர்களும், அதிகாரிகளும், கட்டடங்களுக்கு வெளியே அல்லது வாகனங்களுக்கு வெளியே இருக்கும் போது, கட்டாயம் N95 சுவாசக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

---------

ஆசிய விளையாட்டுப் போட்டியை Astro, தினமும் 13 மணி நேரம் வரை 7 அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்புகிறது.

795 முதல் 799 வரையிலான அலைவரிசைகள், Astro Arena அலைவரிசை 801, மற்றும் Stadium Astro அலைவரிசை 802 ஆகிய 7 அலைவரிசைகளில் அப்போட்டியை நேரலையாகக் காணலாம்.

செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டியை, Astro GO செயலி மூலமாகவும் நேரலையாகக் காணலாம்.

RAAGA Aaha Siranta Isai!