Skip to main content

Advertisement

இங்கிலாந்தை பாராட்டிய Thomas Tuchel !

 

Nations League போட்டியில், உலக வெற்றியாளரான Spain-னை 3-2 என வீழ்த்திய இங்கிலாந்து கால்பந்து அணியின் வெற்றியை, அதன் பயிற்றுநர் Thomas Tuchel பாராட்டியுள்ளார் !

அந்த வெற்றி, ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அப்போட்டியில், மூன்று கோல்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, Elliot Anderson சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால், கடைசி 30 நிமிடங்கள், 10 வீரர்களுடன் விளையாடி வெற்றியைத் தக்கவைத்தது.

மேலும், 44 ஆட்டங்களாக தோல்வியின்றி இருந்த Spain-னின் சாதனைப் பயணத்துக்கும், இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.

--------

Manchester United, AC Milan  தற்காப்பு ஆட்டக்காரர் Koni De Winter-ரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது !

அந்த வீரரை வளைத்துப்போட, Liverpool-லும் Chelsea-யும் அடிபோடுகின்றன.

அடுத்த வாரம், Liverpool-லுடனான பிரிமியர் லீக் ஆட்டத்தில் United களமிறங்குகிறது.

புதிய தலைமை பயிற்றுநர்Mauricio Pochettino-வுக்கு, அதுவே முதல் ஆட்டமாக இருக்கும் நிலையில், நாளை மறுநாள், அவர் United-டில் தனது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார்.

---------

Bayern Munich-கிடமிருந்து Michael Olise-வை ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால், Real Madrid பெரும் தொகையைச் செலுத்த வேண்டி வரும் !

Olise-வை விற்பது குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கே, குறைந்தது 200 மில்லியன் யூரோ வழங்கப்பட வேண்டும் என்றும், அந்தத் தொகை 300 மில்லியன் யூரோ வரை உயரக்கூடும் என்றும் விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.

RAAGA Aaha Siranta Isai!