
ஜப்பானிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் மலேசிய பிரதிநிதிகளின் அடைவு நிலை கணிக்க முடியாத அளவில் உள்ளது!
முதல் சுற்றில் ஆடவர் இரட்டையர் Aaron Chia- Soh Wooi Yik, இந்திய ஜோடியைச் சந்தித்த ஆறு நிமிடங்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.
மற்றொரு இணை Azryn Ayub-Tan Wee Kiong டென்மார்க் ஜோடியிடம் அதே போல் தொடக்கச் சுற்றில் வீழ்ந்தது.
என்றாலும் Goh Sze Fei-Nur Izzuddin மற்றும் Aaron Tai-Yap Roy King ஜோடிகள் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
-
USA தலைமை நிர்வாகி Mauricio Pochettinoவை பத்து மில்லியன் டாலர் விலையில் விடுவிக்கும் நிபந்தனை ஒன்று அவரது ஒப்பந்தத்தில் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன!
Micheal Carrickகை நீக்க முடிவுச் செய்தால், அவரது இடத்தை நிரப்ப Man United, Mauricio Pochettinoவைக் கொண்ட வரலாம் என்ற ஆருடங்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
புதிய ஒப்பந்தம் குறித்து Liverpoolலுடன் பேச்சு வார்த்தையைத் தொடக்கியுள்ளாராம் Allison-நின் அதிகாரி.
Redsசில் Allisonநின் நடப்பு ஒப்பந்தம் இப்பருவ இறுதியில் முடிகிறது.
-
முட்டிக் கால் காயத்தால் செக் குடியரசுக்கு எதிரான Nations லீக் கால்பந்தாட்டத்தை Spain நட்சத்திரம் Lamine Yamal தவறவிடுவதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்குள் அவர் குணமடைந்துவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.