Skip to main content

Advertisement

Liverpool தற்காப்பு பகுதி பலமாக, சில காலம் பிடிக்கும் !

 

லிவர்பூலின் புதிய தற்காப்பு அரண், சிறப்பாக இணைந்து செயல்பட, சிறிது காலம் எடுக்கும் !

2 புதிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளதை அடுத்து, லிவர்பூல் கேப்டன் Virgil van Dijk அவ்வாறு கூறினார்.

Ibrahima Konate-வும், Andy Robertson-னும், அணியிலிருந்து விலகியதுடன், Joe Gomez காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், லிவர்பூல் தனது தற்காப்பு அரணை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வார இறுதியில், புதிய பிரிமியர் லீக் பருவம் தொடங்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, Liverpool - Newcastle-லுடன் மோதுகிறது.

---------

மான்செஸ்டர் சிட்டி, Enzo Fernandez-சை ஒப்பந்தம் செய்ய முயன்றால், Chelsea-க்கு 120 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும் !

ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணை முடிவடைய, இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.

இந்நிலையில், சிட்டி, Fernandez-சை ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியைத் தொடராவிட்டால், அல்லது தாம் எதிர்பார்க்கும் தொகையை வழங்காவிட்டால், அவரை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள முடியும் என Chelsea நம்பிக்கை தெரிவித்தது.

ரசிகர்கள் சிலர் Fernandez-சை  விமர்சித்துள்ள போதிலும், அவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க Chelsea தயாராக உள்ளதாம்.

--------

உலகப் பூப்பந்து போட்டியில், இன்று தேசிய ஆடவர் இரட்டையர் ஜோடிகள், Man Wei Chong - Tee Kai Wun, Goh Sze Fei - Nur Izzuddin முதல் சுற்றில் விளையாடுகின்றனர் !

அதே வேளை, கலப்பு இரட்டையர் Wong Tien Ci - Lim Chiew Sien, தோல்வியடைந்து, அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.

உலகப் பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம். 

RAAGA Aaha Siranta Isai!