Skip to main content

Advertisement

மகிழ்ச்சியில் திளைக்கும் Manchester United !

 

இன்றைய Champions லீக் ஆட்டத்தில், Sabah FK-வை 4-0 என வீழ்த்தியது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக, Manchester United தலைமை பயிற்றுநர் Michael Carrick தெரிவித்துள்ளார் !  

இந்த வெற்றி, ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தாலும், இனிவரும் ஆட்டங்களில், கடுமையான சவால்கள் காத்திருப்பதால், தமதணியிடமிருந்து இன்னும் தரமான ஆட்டத்தை எதிர்பார்ப்பதாக Carrick கூறினார்.

இன்று, முற்பாதி ஆட்டத்திலேயே, United, 3 கோல்களைப் போட்டு அசத்தியது.

மற்ற ஆட்டங்களில், Bayern Munich 5-0 என Bodo Glimt-டை தோற்கடித்தது.

Como 4-1 என RB Leipzig-கை வீழ்த்தியது.  

Fenerbahce, 1-1 என Roma-வுடன் சமநிலை கண்டது.  

---------

இவ்வேளையில், இன்றைய Champions லீக் ஆட்டத்தில், Roma-வுடன் 1-1 என சமநிலை கண்டதால், Fenerbahce தலைமைப் பயிற்றுநர் Ismail Kartal, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் !

எனினும், சில நிமிடங்களுக்குப் பின்னர், Kartal, தொடர்ந்து தலைமைப் பயிற்றுநர் பொறுப்பில் நீடிப்பார் என, அக்கிளப்பின் தலைவர் தெரிவித்தார்.

----------

Para SUKMA போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட, தேசிய விளையாட்டு வீரர்கள், எதிர்காலத்தில் பாராலிம்பிக் போட்டி உள்ளிட்ட பெரிய போட்டிகளில் பங்கேற்று, உலக வெற்றிப் பட்டத்தை வெல்ல வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார் !

அப்போட்டியில், உபசரணை அணியான சிலாங்கூர், மொத்தம் 93 தங்கம், 55 வெள்ளி, 52 வெண்கலம் என 200 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த வெற்றிப் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

--------

ஆசிய விளையாட்டுப் போட்டியில், தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Shah Firdaus Sahrom, keirin பிரிவில் தன்னால் எதிர்பாரா வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் !

எனினும், அதற்கு முன்னதாகத் தனது வலது காலின் வேகமான பந்தயத் திறனை, மேம்படுத்த வேண்டியுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

RAAGA Aaha Siranta Isai!