
கால்பந்து உலகில், FIFPro அமைப்பின் உலகின் சிறந்த 11 வீரர்கள் அணியில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் Harry Kane இடம்பெறாதது, ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது !
சமீபத்தில் Ballon d’Or விருதை வென்றதுடன், கடந்த பருவத்தில், Bayern Munich-யை, Bundesliga பட்டத்தை வெல்ல அவர் உதவியிருந்தார்.
அதனால் அவர் உலகின் சிறந்த பதினொருவர் அணியில் இடம்பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
Lionel Messi,Erling Haaland, Kylian Mbappe, Lamine Yamal உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள், அவ்வணியில் இடம்பெற்றனர்.
---------
நிதி நிலைமையை ஈடுகட்டும் நோக்கில் இரண்டு முக்கிய வீரர்களை விற்க, ஆர்சனல் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன !
அந்த வகையில், Viktor Gyokeres மற்றும் Mikel Merino-னை விற்க அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
--------
Man United தலைமைப் பயிற்சியாளர் Michael Carrick-கின் எதிர்காலம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !
பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் United, தற்போது கடைசிக்கு மூன்றாவது இடத்தில் உள்ளது.
---------
ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Aaron Chia - Soh Wooi Yik, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah உட்பட, சில தேசிய பிரதிநிதிகள் இன்று தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர் !