
Mauricio Pochettino தான், தனது புதிய நிர்வாகி என்பதை, Manchester United உறுதிப்படுத்தியுள்ளது !
அவர், United-டில் இரண்டரை ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
Pochettino, நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி, அதிகாரப்பூர்வமாக தனது பணியைத் தொடங்குவார்.
----------
இதனிடையே, அமெரிக்கக் கால்பந்து அணியின் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகி, Manchester United-டின் நிர்வாகியாகப் பொறுப்பேற்பது, தனது கால்பந்து வாழ்க்கையில், மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று என, Mauricio Pochettino தெரிவித்துள்ளார் !
54 வயது அர்ஜென்டினா நாட்டவரான Pochettino, முன்னாள் நிர்வாகி Michael Carrick பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட்டின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார்.
முன்னதாக Tottenham, Chelsea, PSG ஆகிய கிளப்புகளின் நிர்வாகியாக அவர் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
---------
மற்றொரு பக்கம், Manchester United, 2-ஆவது முறையாக வழங்கிய ஒப்பந்தத்தை கேப்டன் Bruno Fernandes நிராகரித்துள்ளார் !
யுனைடட்டுடனான அவரது நடப்பு ஒப்பந்தம் இப்பருவத்தோடு முடிவடைகிறது.
---------
தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King உள்ளிட்டோர் மோதும், ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதியாட்டங்களை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும், நேரலையாகக் காணலாம்.