
Nations லீக் கால்பந்தாட்டத்தின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது ஜெர்மனி!
அதிகாலை நெதர்லாந்தைச் சந்தித்த குழு நிலை ஆட்டத்தில் அவ்வணி 5-0 என வெற்றிப் பெற்றது.
1959ஆம் ஆண்டுக்குப் பிறகு நெதர்லாந்துக்கு எதிராக ஜெர்மனி பதிவுச் செய்யும் இவ்வளவு பெரிய வெற்றி இதுவாகும்.
படுதோல்வி கண்டாலும், குழுவின் இரண்டாம் நிலை வெற்றியாளர் என்ற முறையில் நெதர்லாந்தும் காலிறுதிக்குச் சென்றுவிட்டது.
-----
புதிய நிர்வாகி Mauricio Pochettinoவின் கீழ் இருக்கும் Man United, Newcstle வீரர் Lewis Hall மீதான தனது ஆர்வத்திற்குப் புத்துயிர் கொடுத்துள்ளது!
எதுவாயினும் Hallலை விற்க எந்த அழைப்பையும் பரிசீலிக்கத் தயாராக இல்லை என Magpies திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
------
இன்று Yaman-னைச் சந்திக்கும் அனைத்துலக நட்புமுறை கால்பந்தாட்டத்தில் காயத்தால் Dominic Tan களமிறங்கமாட்டார் என்பதை இடைக்கால நிர்வாகி Tan Chen Hoe உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நன்பகல் மணி 1.30 தொடங்கி Astro ARENA BOLA அலைவரிசை 803 மற்றும் சூக்காவில் காணலாம்.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும் Stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்