
24 ஆண்டுகளுக்குப் பிறகு, குழுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது !
தங்கப் பதக்கத்துக்கு 15 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 40 ஆயிரம் ரிங்கிட்டாகவும், வெள்ளிப் பதக்கத்துக்கு, 8 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 20 ஆயிரம் ரிங்கிட்டாகவும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
அதே வேளை, வெண்கலப் பதக்கத்துக்கான ஊக்கத்தொகை, 4 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 10 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்தத் தொகை, குழுவில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையைப் பாராது, ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தப் புதிய ஊக்கத்தொகை நடைமுறைக்கு வரும்.
எனினும், தனிநபர் பிரிவுக்கான ஊக்கத்தொகையில், எந்தவொரு மாற்றமும் இல்லை.
---------
ஜப்பான் மாடர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !
அவர்கள், முதல் சுற்றில், தாய்லாந்து ஜோடியை வீழ்த்தினர்.
அதே வேளை, கலப்பு இரட்டையர் Hoo Pang Rong - Lai Pei Jing-கும், அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
---------
இங்கிலாந்து கால்பந்து அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை, Harry Kane விரைவில் தன்வசப்படுத்தவுள்ளார் !
Croatia-வுக்கு எதிரான Nations லீக் ஆட்டத்தில் களமிறங்கினால், அது அவருடைய 126-ஆவது அனைத்துலக போட்டியாகும்.
இதன் வழி, 1990-ஆம் ஆண்டு முதல் Peter Shilton வசம் இருந்த சாதனையை, Kane முறியடிப்பார்.