
Man City முன்னாள் நிர்வாகி Pep Guardiolaவின் மீது USA தேசிய அணியின் கவனம் திரும்பியிருக்கிறது!
நடப்பு தலைமை நிர்வாகி Mauricio Pochettino Man Unitedடுக்குச் சென்றால், அவரது இடத்தை Guardiolaவைக் கொண்டு நிறப்பப் பார்க்கிறதாம் அவ்வணி.
இதனிடையே, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பில் Unitedடிற்கும், Pochettinoவுக்கும் இடையே வாய்மொழி இணக்கம் காணப்பட்டுள்ளதாக UK ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
-----
ஜப்பானிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் மலேசியா காலிறுதிக்குச் செல்வது உறுதி!
ஆடவர் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் Goh Sze Fei-Nur Izzuddin இணை சக மலேசிய இணையான Aaron Tai-Yap Roy Kingகைச் சந்திக்கின்றது.
அவர்களுடன் மற்றொரு ஆடவர் இரட்டையர் Man Wei Chong-Tee Kai Wun கலப்பு இரட்டையர் Hoo Pang Ron-Lai Pei Jing ஆகியோரும் இன்று இரண்டாம் சுற்றில் களமிறங்குகின்றனர்.
அதன் நேரடி ஒளிபரப்பை இன்று காலை எட்டு மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.
-----
2027 பருவத் தொடக்கத்தின் F1 பந்தையத்தை மலேசியா ஏற்று நடத்தலாம் எனக் கூறப்படுவதை, சிலாங்கூர், செப்பாங் அனைத்துலக பந்தையத்தளம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும் stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்.