லிவர்பூல் மத்திய திடல் வீரர் Dominik Szoboszlai-யின் காயம் குறித்து அணிக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது !
ஞாயிற்றுக்கிழமை பிரீமியர் லீக்கில், மான்செஸ்டர் யுனைடெட்டைச் சந்திக்கவிருக்கும் அவ்வணிக்கு அது பேர் ஆதரவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிறிய காயங்கள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், நாளை அதிகாலை வட அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், Szoboszlai Hungary-க்காக விளையாடுவார் என அணி பயிற்றுநர் Marco Rossi உறுதிப்படுத்தியுள்ளார்.
--
ஜனவரியில் தொடங்கவிருக்கும் ஆட்டக்காரர்களை மாற்றிக் கொள்ளும் தவணையின் போது, இங்கிலாந்து தற்காப்பு வீரர் Lewis Hall ஐ விற்பனை செய்யப்போவதில்லை என நியூகாசல் யுனைடெட் தெரிவித்துள்ளது.
22 வயதான அவர் மீது, மான்செஸ்டர் யுனைடெட் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில்,2031ஆம் ஆண்டு வரை நியூகாசலில் ஒப்பந்தம் கொண்டுள்ள அவரின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
--
Guangdong கில் இன்று பிற்பகல் நடைபெற்ற அனைத்துலக நட்பு முறை கால்பந்து ஆட்டத்தில், மலேசியா ஏமனை 2-1 என வீழ்த்தியது.
--
Dominican குடியரசில் நடைபெற்ற OCEANMAN உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 16 வயதான மலேசிய நீச்சல் வீரர் Max Tang வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவர்களுக்கான 2 கிலோமீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.