Skip to main content
13 இடங்களில் காற்றின் தரம் மோசமானது!

 

 

ஆகக் கடைசி தகவல்படி நாட்டில் 13 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.

நெகிரி செம்பிலானின், Seremban, Nilai, KLலின் Cheras, Batu Muda, சிலாங்கூர், ஷா ஆலாம், பந்திங் உள்ளிட்ட இடங்கள் அவற்றுள் அடங்கும்.

மேல் விவரங்களை மலேசிய சுற்றுச்சூழல் துறையின் அகப்பக்கத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

-----

இதனிடையே இந்தோனேசியாவின் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது!

 

இன்னும் ஏறக்குறைய இரு வாரங்களில் நிலைமை முழுமையாக சீரடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

------

கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, மற்றும் ஜொகூரில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

அம்மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று நன்பகல் ஒரு மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, MetMalaysia கணித்துள்ளது.

 

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேசிய தின சிறப்புக் கொண்டாட்டத்தின் போது, போக்குவரத்தையும், பொது பாதுகாப்பையும் கட்டுப்படுத்த ஈராயிரத்து 300 காவல் துறை உறுப்பினர்கள் Putrajayaவில் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்!

80 ஆயிரம் பார்வையாளர்கள் அந்நிகழ்வுக்கு வருகை புரிவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தேசிய தின கொண்டாட்டத்தை ஒட்டி KLலிலும் Putrajayaவிலும் சில சாலைகள் மூடப்படுவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

-----

வயது குறைந்த பிள்ளைகள் தங்களின் தளத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்காததோடு, இளைஞர்களைக் குறி வைத்து விளம்பர பிரச்சாரங்களை மேற்கொண்டதற்காக TikTokகுக்கு கிட்டத்தட்ட 30 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது Brazil. 

RAAGA Aaha Siranta Isai!