
நெகிரி செம்பிலான், Kuala Pilahவில் பகடிவதையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் 14 வயது மாணவனின் பிரதே பரிசோதனை நிறைவடைந்துள்ளது!
என்றாலும் மரணத்திற்கான காரணம் அதில் தெரிய வராத காரணத்தால், மேல்கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே அச்சம்பவம் தொடர்பில், ஆசிரியர்கள் மாணவர்கள் என 21 பேரிடமிருந்து இதுவரை வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுவிட்டது.
நேற்று முன்தினம் மாணவர்கள் தங்கும் விடுதியில் மயங்கி விழுந்த அம்மாணவன் பின்னர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
------
ஆகக் கடைசி தகவல்படி நாட்டின் ஆறு பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது!
ஜொகூரின் Kota Tinggi, Pasir Gudang, Pengerang, Larkin ஆகியவை அவற்றுள் அடங்கும்.
எஞ்சிய இரு பகுதிகளில் சரவாக்கில் உள்ளன.
-----
பஹாங், சிலாங்கூர், குவாலா லும்பூர், புத்ராஜயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!
அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று நன்பகல் ஒரு மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.
------
ஜொகூரில், சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமையை வாங்கித் தருவதாகக் கூறிய கும்பலை நம்பி, 60 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் தனது சேமிப்பிலிருந்து ஏழரை லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்!
சமூக ஊடகத்தில் வந்த விளம்பரம் ஒன்றில், சிங்கப்பூர் PR அங்கீகாரத்தைப் பெற வெறும் முன்னூரு டாலரே என கூறப்பட்டதை நம்பிய அம்மாது, அதன் பின் செயல்முறை கட்டணம் என மாதக்கணக்கிலொ எஞ்சிய பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார்.
-----
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான ஈரானின் முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் உள்ளிட்ட மேலும் பல முன்மொழிவுகளையும் ஈரான் முன்வைத்திருந்தது.
எனினும் போரில் மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருப்பதால் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகக் கூறி அவை அனைத்தையும் டிரம்ப் நிராகரித்தார்.