Skip to main content
1500 சிறாருக்கு எதிரான உள்ளடக்கங்கள் நீக்கம்!

ஜனவரி 2022 முதல் இவ்வாண்டு ஜூன் வரை ஆயிரத்து ஐநூருக்கும் மேற்பட்ட சிறாரை உட்படுத்திய தவறான உள்ளடக்கங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன!

 

மலேசிய பல்லூடக ஆணையத்தின் அமுலாக்க நடவடிக்கைகளின் பலனாக, சேவை வழங்குனர்கள் அவற்றை நீக்கியிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சு கூறியது.

 

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அமுலுக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள், வயது சரிபார்ப்பு மற்றும் 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதற்குத் தடை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.

 

------ 

 

இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து இம்மாதம் 15ஆம் தேதி வரை, தாமதமாக பிறப்பை பதிந்துக் கொள்ள நாலாயிரத்து அறுநூரு விண்ணப்பங்களை தேசிய பதிவுத் துறை பெற்றுள்ளது.

 

பிறப்பைப் பதிந்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

 

அதனை செய்யத் தவறுவதோ, அல்லது தாமதப் படுத்துவதோ, ஒரு நபருக்கு ஆவணச் சிக்கலை உண்டாக்கி, பல்வேறு சலுகைகளை அவர் இழக்க வித்திடும் என JPN வலியுறுத்தியது.

 

------ 

 

வெள்ள அபாயம் அதிகம் உள்ள மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை உள்ளடக்கிய உடனடி மற்றும் மிதமான வெள்ளத் தணிப்புத் திட்டச் செயல்திட்டத்தை  சிலாங்கூர் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

 

அம்மாநிலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 40 புள்ளி ஐந்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

------- 

 

உலகி  மிக சக்தி வாந்த கடப்பிதழ்கள் தர வரிசையில் தனது ஏழாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது மலேசியா!

 

183 இடங்களுக்கு விசா விலக்கு அல்லது Visa on arrival வசதியைக் கொடுக்கும் கடப்பிதழாக அது திகழ்கிறது.

 

----- 

 

கடந்த மே மாதத்திலிருந்து முதல் முறையாக எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூரு டாலர் மதிப்பை எட்டியிருக்கிறது!

 

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்களை மேலும் தூண்டியுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!