நாட்டில் 17 பகுதிகளில் முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
சபாவில் 5 பகுதிகளிலும், மற்றவை பேராக், சிலாங்கூர், பஹாங், கிளந்தான்,சரவாக் மாநிலங்களை உள்ளடக்கியவை.
அப்பகுதிகளில், தொடர்ந்து மூன்று நாட்களாக வெப்பம் 35 முதல் 37 பாகை செல்சியசாகப் பதிவாகியிருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தினசரி வெப்பநிலை நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ள பொதுமக்கள் MetMalaysia அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிப் பார்க்கலாம்.
--
நாடு முழுவதும் 30 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது !
சரவாக்கில் ஆறு இடங்களிலும், எஞ்சியவை சிலாங்கூர், கோலாலும்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு, ஜொகூர், மலாக்கா, கெடா மாநிலங்களின் சில பகுதிகளை உட்படுத்தியவை.
சுற்றுச்சூழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 80 விழுக்காடு பகுதிகளில் API குறியீடு 150-ஐத் தாண்டியுள்ளது.
--
இதனிடையே, புகைமூட்டத்தைக் களையும் நோக்கில், நாட்டின் எல்லைப் பகுதிகளில் செயற்கை மழையைப் பெய்யச் செய்ய இந்தோனேசியா வான்வெளிக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ளதாக நமது அரசாங்கம் தெரிவித்துள்ளது.
--
2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மகளிர், குடும்ப சமூக நல மேம்பாட்டு அமைச்சு கூடுதலாக 168 மில்லியன் ரிங்கிட்டை கோரியுள்ளது.
முதியோர் பராமரிப்பு சேவைகளை உட்படுத்திய இலக்கு வைக்கப்பட்ட குழுக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவே அந்நிதி உதவும் என அமைச்சு சொன்னது.
--
சிலாங்கூர், காஜாங்கில் நடைபெறவிருக்கும் மாநில தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, 5 முக்கிய சாலைகள் ஆகஸ்ட் 26 முதல் படிப்படியாக மூடப்பட்டு, ஆகஸ்ட் 30 அன்று முழுமையாக மூடப்படும்.
பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு, அல்லது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு மாநில காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
--