நாட்டில் 19 இடங்களில் காற்றின்தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது!
சரவாக் Serian-னில் ஆக அதிகமாக 194 என அதிகபட்ச API குறியீட்டை காட்டுவதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் சிலாங்கூரில் johan Setia,ஷா ஆலாம், குவால சிலாங்கூர், தலைநகரில் செராஸ், புத்ராஜெயா, கெடாவில் Sg. petani, Alor Setar, பினாங்கில் Minden ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதோடு, மலாக்கா Bukit Rambai, ஜொகூரில் Kota Tinggi,பேராக்கில் ஸ்ரீ மஞ்சோங், தாசேக் ஈப்போ, தஞ்சோங் மாலிம் ஆகிய பகுதிளிலும் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது.
அதே சமயம், மற்ற மாநிலங்களையும் உள்ளடக்கிய 49 இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் உள்ளது.
--
குறைந்தபட்ச சம்பளத்தை 1,700 ரிங்கிட்டில் இருந்து 3,100 ரிங்கிட் ஆக உயர்த்துவது சில நிறுவனங்களுக்கு பெரிய செலவு சுமையை ஏற்படுத்தலாம்!
அவ்வாறு, மலேசிய உற்பத்தி சம்மேளனம், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் கோரிக்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பளத்தை திடீரென அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் குறைவது, முதலீடுகள் பாதிக்கப்படுவது மாதிரியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அது மேலும் கூறியது.
முன்னதாக, வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதை மேற்கோள் காட்டி MTUC, அச்சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்தது.
--
தலைநகரில், இம்மாத தொடக்கத்தில் பெண் ஒருவருக்கு தீயிட்டு கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டை தொடர்புடைய ஆடவர் ஒருவர் மறுத்துள்ளார்.
அவருக்கு 15,000 ரிங்கிட் பிணை வழங்கியதோடு,அடுத்த மாதம் 25 ஆம் திகதி மறுவிசாரணை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
--
புத்ராஜெயாவில், கடந்த வியாழக்கிழமை கார் மோதி இரு சைக்கிளோட்டிகளைப் பலிக்கொண்ட விபத்து தொடர்பில், CCTV காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில் நால்வரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
--
Melaka ஆளுநர் Ali Rustam-மின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு 1,328 பேருக்கு மாநில விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கல்வி அமைச்சர் Fadhlina Sidek “Datuk Seri” பட்டம் பெற்றார்.
Bukit Aman குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ M Kumar, மலாக்கா காவல்துறை தலைவர் Dzulkhairi Mukhtar உட்பட 56 பேருக்கு “Datuk Wira” பட்டம் வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி Suria Kumar Durairaj Johson Paul க்கு Datuk பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.