
BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை, மாதத்திற்கு 300 லிட்டரில் இருந்து 200 லிட்டராக குறைத்ததற்கு, பிரதமர் விளக்கம் அளித்துள்ளார் !
பெரும்பாலானோர், அந்த புதிய வரம்பை விட மிகவும் குறைவான அளவிலேயே எரிபொருளைப் பயன்படுத்துவதாக, உண்மையான பயன்பாட்டுத் தரவுகள் காட்டியதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் முதல், இவ்வாண்டு மே வரை, BUDI95 திட்டத்துக்குத் தகுதியானவர்களில், 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே, 200 லிட்டருக்கும் அதிகமாக RON95 எரிபொருளைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
தற்போதைய 200 லிட்டர் ஒதுக்கீடு, பெரும்பாலான மலேசியர்களின் அன்றாட பயணத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது.
அவர்களின் வழக்கமான பெட்ரோல் பயன்பாட்டில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது, என்றாரவர்.
----------
El Nino பருவத்தின் தாக்கத்தை சமாளிக்க, நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது !
விவசாய உற்பத்தியில் பாதிப்பை குறைக்கும் நோக்கில், வானிலைக்கு ஏற்ற நெல் வகைகளை உருவாக்கும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, விவசாய, உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது.
அதீத வெப்பத்தை உண்டாக்கும் El Nino பருவம், இவ்வாண்டு நவம்பரில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
--------
குடிநுழைவு முகப்புகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், கண்காணிப்பு நடவடிக்கைகளை உள்துறை அமைச்சு மேலும் வலுப்படுத்தி வருகிறது !
உடலில் அணியும் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட CCTV கேமராக்கள், குடிநுழைவு முகப்புகளில் நிகழும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை நாள்தோறும் கண்காணிக்கும் முறை ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
---------
பினாங்கு பாலத்தில் இருந்து, மீன் பிடித்துக் கொண்டிருதபோது தவறி விழுந்ததாகக் கூறப்படும் ஆடவர், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் !
---------
ஜொகூர் Skudai-யில், கடந்த மாதம், சகநாட்டு நண்பரை கொலை செய்ததாக, மியன்மார் நாட்டு ஆடவர் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது !