Skip to main content
22 ஆயிரம் இந்திய குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சு அன்பளிப்பு வழங்கியது!

 

 

அடுத்த வாரம் கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த 22,000 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.

 

மடானி அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவி, தீபாவளிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

22,000 உணவுப் பொருள் கூடைகள் வழங்கப்படுவது இதுவரை இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

 

தேவையைப் பொறுத்து அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றார் அவர்.

 

-----

 

ஒற்றுமை துறை அமைச்சின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 14ஆம் தேதி தலைநகர் Brickfieldsசில் தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்டம் ஒன்று நடைபெறுகிறது!

 

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வருகையாளர்களை எதிர்ப்பார்க்கும் அந்நிகழ்வை பிரதமர் DSAI அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என, ஒற்றுமை துறை துணை அமைச்சர் R Yuneswaran தெரிவித்தார்.

 

உள்ளூர் சிறப்புகளை எடுத்துறைக்கும் வண்ணம், பல்வேறு கலை படைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

இவ்விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

 

-----

 

தம்பதிக்கு இடைதே நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம், பிரசவ விடுப்பை கணவன் மனைவி இருவரே பகிர்ந்துக் கொள்ளும் பரிந்துரையை அரசாங்கம் ஆராய்கிறது!

இதன் மூலம் தாயையும் பிள்ளையையும் கூடுதல் அக்கரையுடன் கவனித்துக் கொள்ள முடியும் என, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

நடப்பில் பெண்களுக்கு குறைந்த பட்சமாக 98 நாட்கள் வரையும், ஆண்களுக்கு ஏழு நாட்கள் வரையும் பிரசவ விடுப்பு வழங்கப்படுகிறது.

-----

2022 முதல் இணைய மோசடி தொடர்பில் 14 மில்லியன் ரிங்கிட்டை மீட்டுள்ள தேசிய மோசடி நடவடிக்கை மையம்!

அதே காலகட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட் வரையிலான இழப்பை அம்மையம் தவிர்த்திருப்பதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

------ 

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கான சட்டத்தை திருத்த எண்ணமில்லை!

நடப்புச் சட்டங்களே அப்பிரச்னையைக்  களைய போதுமானதாக இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

RAAGA Aaha Siranta Isai!