
16ஆவது மலாக்கா மாநில தேர்தலில் போட்டியிட்ட ஏறக்குறைய 26 வேட்பாளர்கள், ஒட்டுமொத்த வாக்குகளில் எட்டில் குறைந்தது ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறியதால் வைப்புத் தொகையை இழந்தனர்!
ஆக அதிகமாக பெர்சாமா கட்சி சார்பில் போட்டியிட்ட 16 வேட்பாளர்களில் 15 பேர் தோல்வியைத் தழுவினர்.
நேற்று அம்மாநிலத்தின் 16ஆவது தேர்தலில் BN-நும் பெரிக்காத்தான் நேஷ்னலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வெற்றியை ஈட்டியதை அடுத்து அந்த நியமனம் இடம்பெறுகிறது.
மொத்தம் 28 தொகுதிகளை உட்படுத்திய அத்தேர்தலில் BN 21 தொகுதிகளிலும், PN மூன்று தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் நான்கு இடங்களையும் வென்றன.
வெற்றிப் பெற்றவர்களில் Gadek தொகுதியில் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் நடராஜா செல்லப்பாவும் ஒருவராவார்.
இதையடுத்து மலாக்கா மாநில முதலமைச்சராக Datuk Seri Dr Abdul Rauf Yusoh தனது பணியைத் தொடர வேட்பாளராக நியமித்துள்ளது Barisan Nasional.
-----
Philipinesசின் மநிலாவில் இன்று திறப்பு விழா காணும் 49ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்பான உச்சநிலை மாநாட்டில் பிரதமர் DSAI கலந்து கொள்கிறார்!
நேற்று அங்கு சென்று சேர்ந்த பிரதமருடன் வெளியுறவு அமைச்சர், உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
-----
சிலாங்கூர், Kajangகில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் குற்றவியல் அம்சங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது!
பிரேத பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்த அத்துறை, அவ்விவகாரம் தொடர்பில் தேவையில்லா ஆருடங்களைப் பரப்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அவர்களது மரணம் முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேச்சுப்பொருளானது.
-----
ஆகக் கடைசி தகவல்படி சிலாங்கூரில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூரு பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்!
பேராவில் 230 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
----
கிளாந்தான், திரங்காணு, ஜொகூர் மற்றும் பஹாங்கில் கனமழை எச்சரிக்கை!
அம்மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று நன்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, MetMalaysia கணித்துள்ளது.