Skip to main content
400 கருவிகளைப் பொருத்த DBKL திட்டம் !

 

தலைநகரின் முக்கிய இடங்களில் மரங்களைக் கண்காணிக்கும் 400 கருவிகளைப் பொருத்த, கோலாலம்பூர் மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது !

வார இறுதியில், உயிரிழப்பை உட்படுத்திய மரம் விழுந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறியும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், இதனைப் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் கருவிகள் கட்டம் கட்டமாகப் பொருத்தப்படும் என்றும், முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான பகுதிகளில் நிறுவப்பட்டு, மரங்களின் நிலை கண்காணிக்கப்படும் என்றும், DBKL கூறியது.

மரங்களின் உறுதித்தன்மையை பாதிக்கக்கூடிய மாற்றங்கள் குறித்து, முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் இவை செயல்படும்.

வார இறுதியில், Jalan Tun Razak சாலையில், மரம் ஒன்று விழுந்து 43 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.

---------

பினாங்கு Berapit பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் கடத்தல் கும்பல் தொடர்பில், காவல்துறை விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என, Bukit Mertajam நாடாளுமன்ற உறுப்பினர் Steven Sim வலியுறுத்தியுள்ளார் !

இந்த கும்பலுக்கு பின்னால் இருந்து செயல்பட்ட முக்கிய நபர்கள் உட்பட, சம்பந்தப்பட்ட அனைவரும், விரைவில் சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மையில், அப்பகுதியில், அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக நம்பப்படும் 25 வயதான, கேமரூன் நாட்டுப் பெண் ஒருவர் மீட்கப்பட்டார்.

---------

அனைத்து மலேசியர்களும், பெருமிதத்துடன் ஜலூர் ஜெமிலாங் தேசியக் கொடியை பறக்கவிடும்படியும், கொடி சரியான முறையில் பொருத்தப்பட்டு, நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் !

AI செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கொடியை உருவாக்கும் போதும், மிகுந்த கவனமுடன் இருக்கும்படியும், மக்களை, தொடர்புத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

---------

பேராக் Kampar-ரில், மோசடி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கிய முதியவர் ஒருவர், கடந்தாண்டு செப்டம்பர் முதல் இதுவரை, 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பணத்தைப் பறிகொடுத்துள்ளார் !

-----------

முகநூலில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறைத் தொடர்ந்து, தற்போது அதன் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!