Skip to main content
4கில் ஒரு குடும்ப வன்முறை ஆண்களை உட்படுத்தியது!

 

நாட்டில் பதிவாகும் நான்கில் ஒரு குடும்ப வன்முறைச் சம்பவம் ஆண்களை உட்படுத்தியிருக்கிறது! 

 

கடந்தாண்டு நாடு முழுவதும் பதிவான ஏழாயிரத்து முன்னூருக்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைச் சம்பவங்களில், கிட்டத்தட்ட ஈராயிரம் சம்பவங்கள் ஆண்களை உட்படுத்தியிருந்ததாக,மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்தார். 

 

காவல் துறையின் தரவுபடி, 2024ஆம் ஆண்டில் ஏழாயிரத்து 116ஆக இருந்த குடும்ப வன்முறை சம்பவங்கள், கடந்தாண்டு கிட்டத்தட்ட ஏழாயிரத்து நானூராக உயர்ந்துள்ளன. 

 

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்கள் மட்டும் அவற்றின் எண்ணிக்கை ஈராயிரத்தை எட்டுகிறது. 

 

இச்சூழலுக்கு தீர்வு காணும் முயற்சியாக அனைத்துலக மகளிர் தினத்தை ஒட்டி, மார்ச் பத்தாம் தேதி அரசாங்கம் Prismanita தளத்தை அறிமுகப்படுத்தியது. 

 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடியாக பலதரப்பட்ட உதவிகளை ஒரே இடத்தில் அத்தளம் வழங்கும் என்றார் அவர். 

 

----- 

 

தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடைகளின் வாடகையைக் குறைத்துக் கொள்ளும்படி, ஊராட்சி மன்றங்களையும் மாநில அரசுக்களையும் வலியுறுத்துகிறது தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றம்! 

 

உயர்ந்து வரும் செயல்பாட்டு செலவீனங்களுக்கு நடுவே சிறு , குறு வியாபாரிகளின் பொருளாதார நிலைக்கு அது மிகப்பெரும் உதவியாக அமையும். 

 

நடப்புத் தரவின் படி, அவர்களின் செயல்பாட்டுச் செலவீனம், மொத்த வியாபார செலவில் சராசரியாக ஏழுலிருந்து 58 விழுக்காட்டை உட்படுத்தியிருப்பதாக அம்மன்றம் கூறியது. 

----- 

உலகின் சில நாடுகளில் பரவி வரும் புதிய Hantavirusசை கண்டுபிடிக்கும் tracker அம்சம், தேவைப்பட்டால் MySejahtera செயலியில் சேர்க்கப்படும். 

அதன் மூலம் அந்நோய்த் தொற்று குறித்த அண்மைய தகவல்களைப் பயனர்கள் அச்செயலி வாயிலாகவே பெற்றுக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

-----  

Kuala Pilahவில் உள்ள Ulu Bendol நீர்வீழ்ச்சி பகுதியில், leptospirosis எனப்படும் எலிகாய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 

இதையடுத்து அப்பகுதி அடுத்த 11 நாட்களுக்கு எல்லா நடவடிக்கைகளுக்கும் மூடப்பட்டுள்ளது. 

----- 

பொதுச் சேவை துறையில் தனது 42 ஆண்டுகால சேவைக்கு முற்றுப் புள்ளி வைத்து, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செயதார் Tan Sri Azam Baki. 

RAAGA Aaha Siranta Isai!