
இந்திய சமூகத்தின் சமய மற்றும் சமூக நலனை வலுப்படுத்தும் வகையில், Dharma MADANI திட்டத்தின் கீழ், 52 இந்து ஆலயங்களுக்கு, 1.04 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளது !
இதுவரை MADANI அரசாங்கம், 676 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 13.52 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, மனிதவள அமைச்சர் Datuk Seri R. ரமணன் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தின் கல்வி, தொழில் வளர்ச்சி மற்றும் சமூக நலனை மேம்படுத்தி, வலிமையான மற்றும் வளமான சமூகமாக உருவாக்குவதே, இத்திட்டங்களின் நோக்கமாகும் என அவர் கூறினார்.
---------
போதைப்பொருள் கும்பல்கள், போதைப்பொருட்களை விநியோகிக்க, கூரியர் நிறுவனங்கள் மற்றும் விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 65 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது, கடந்தாண்டு முழுவதுமே பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையை தொடவுள்ளது.
--------
நான்கு கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் சென்னையில் கைதான மலேசியரின் பின்னணியில் உள்ள போதைப்பொருள் கும்பல் குறித்து ,காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது!
சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கும்பல் வலையில் உள்ளவர்களை அடையாளம் காண, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக, Bukit Aman தெரிவித்துள்ளது.
பேராக்கைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபருக்கு, மலேசியாவில் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றப் பதிவும் இல்லை.
---------
சிலாங்கூர் சுபாங்கில், சக நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருந்த போது, ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போன 7 வயது சிறுவன், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான் !
----------
கொலம்பியாவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார் !
*********************************************
நாட்டின் சில பகுதிகளில், புகைமூட்டம் நிலவி வருவதால், அந்நேரங்களில், காற்றுத் தரக் குறியீடு அளவைத் தொடர்ந்து கண்காணித்துக்கொள்ளுங்கள் !
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ஏற்கனவே சுவாசம் அல்லது இதயம் தொடர்பான நோய்களைக் கொண்டவர்கள், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து இருமல், சுவாசிப்பதில் சிரமம், மார்பு அசௌகரியம், மூச்சுத்திணறல் அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.