Skip to main content
55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை !

நேப்பாள மற்றும் சீன பெருவெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களை இன்னமும் தொடர்புக் கொள்ள முடியவில்லை !

அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக, Wisma Putra தெரிவித்துள்ளது.

உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் முதலில் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்.

அதே சமயம் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என அது கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் உள்ள மலேசியத் தூதரகமும் நேபாள அதிகாரிகளுடனும் இணைந்து அண்மைய நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவயாகவும் அது சொன்னது.

--

2015 முதல் 2017 வரை Tabung Haji வாரியத்திற்குச் சொந்தமான 860 புள்ளி மூன்று மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை அழித்ததாக, Datuk Seri Jamil Khir Baharom மீது Sessions நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது!

பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அந்த முன்னாள் அமைச்சர், தம்மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

--

தலைநகர் Jalan Ampang ஆடம்பர குடியிருப்பு ஒன்றில், கடந்த வாரம் 2.91 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பை ஏற்படுத்திய கொள்ளைக் கும்பலைக் காவல் துறை அடையாளம் கண்டுள்ளது.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில்,விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

--

சிலாங்கூர் Seri Petaling-ங்கில் வெடிகுண்டு இருப்பதாக வெளிவந்த தகவல் புரளிதான என்பதை காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஜொகூர் பாருபில் பேரங்காடி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி ஒன்று கிளம்பியது.

RAAGA Aaha Siranta Isai!