Skip to main content
59.2% ஊழியர்கள் உடல்பருமனால் பாதிப்பு !

சமூக பாதுகாப்பு அமைப்பு Socsoவின் கீழ் சுகாதார சோதனை மேற்கொண்ட ஊழியர்களில் 59.2 விழுக்காட்டினர் உடல்பருமன் பிரச்னையைக் கொண்டுள்ளனர்!

 

இது 2023 முதல் 2025 ஆண்டு வரையிலான தரவு என, மனிதவள துணையமைச்சர் தெரிவித்தார். 

 

19 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோயும், 17.45 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருப்பதும் அச்சோதனையில் தெரிய வந்துள்ளது. 

 

59 விழுக்காட்டினருக்கும் மேல் உடல் கொழுப்பு அதிகமாக உள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் 40 முதல் 59 வயதுடையவர்களே. 

 

--

 

Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தின் முதலாம் முணையத்தில் உள்ள புறப்பாடு வாயிலை அத்துமீறி கடந்து செல்ல முயன்ற சீன நாட்டு மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

கடந்த மாத இறுதியில் மலேசியா வந்த அவருக்குப் புறப்பட டிக்கட் வாங்க பணம் இல்லாத காரணத்தால் அவர் அவ்வாறு நடந்துக் கொண்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

--

 

Pandan நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Rafizi Ramliயும், Setiawangsa நாடாளுமன்ற உறுப்பினர் Nik Nazmi Nik Ahmadடும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்! 

 

அந்த முன்னாள் அமைச்சர்கள் PKRரை விட்டும் விலகும் நிலையில், அடுத்த பொது தேர்தலில் புதிய கட்சியான Parti Bersama Malaysia சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

 

--

 

நாட்டிலுள்ள எல்லா முஸ்லீம்களும் இம்மாதம் 27ஆம் தேதி ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவர் என அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்துள்ளார். 

--

தாய்லாந்தின் மத்திய Bangkokகில் எண்மரை பலி கொண்ட சரக்கு ரயில் ஓட்டுனர் மீது கவனக்குறைவு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது! 

 

அவர் கொண்டு வந்த சரக்கு ரயில பேருந்து ஒன்றை மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் காயத்திற்கும் இலக்காகினர். 

RAAGA Aaha Siranta Isai!