
ஆறாம் படிவம் கல்வி முறை, தற்போதைக்கு கல்வி அமைச்சின் கீழே தொடரும் !
தேவை ஏற்பட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் அந்த கல்வி முறையை, உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும் முடிவு, மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அடுத்தாண்டு முதல், ஆறாம் படிவம் மற்றும் Matriculation கல்வித் திட்டங்களின் நிர்வாகப் பொறுப்பை, கல்வி அமைச்சிடமிருந்து, உயர்கல்வி அமைச்சு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
---------
பள்ளியின் பெயர் அல்லது செயல்திறன் பாதிக்கப்படும் எனும் அச்சத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, பகடிவதை சம்பவங்களை மறைக்காமல், வெளிப்படையாக தெரிவிக்கும் பள்ளி முதல்வர்களை தாம் மதிப்பதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்துள்ளார் !
ஒரு சம்பவம் பரவலாக பேசப்படுவதால் மட்டும், ஒரு பள்ளி தோல்வியடைந்ததாக கருதக்கூடாது என அவர் கூறினார்.
இதுபோன்ற பிரச்சினைகளை கையாளும் முறையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் தொடர்வதை சுட்டிக்காட்டினார்.
----------
ஜொகூர் பாரு Forest City-யில், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்த, இணைய மோசடி கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது !
அதில், 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு, போலி கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டங்கள் மற்றும் காதல் மோசடிகள் வழி, பணம் பறிக்கும் நடவடிக்கைகளில், இந்தக் கும்பல் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
----------
மற்றொரு நிலவரத்தில், ஜொகூர் பாருவில், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, 18 மாத ஆண் குழந்தையின் மரணம், கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது !
அக்குழந்தையின் தந்தையே, முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, அவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை கூறியது.
----------
பேராக் ஈப்போவில், Sungai Pari அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 2 பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு, தற்போது ஆலோசனை தேவைப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது !
அவர்களை இழந்த சோகத்திலும், குடும்பத்தினர், மனதளவில் சீரான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-----------
Maybank தலைமையகமாகச் செயல்பட்டு வரும் Menara Merdeka 118 கட்டடம், அங்கு அவ்வங்கிக் குழுமத்தின் வருகையைப் பிரதிபலிக்கும் வகையில், அதிகாரப்பூர்வமாக Menara Merdeka Maybank என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது !