Skip to main content
ஆசியானில் அதிக மோசடி நடப்பது மலேசியாவிலே!

 

கடந்தாண்டு 83 விழுக்காட்டு மலேசியர்கள் மோசடியில் சிக்கியிருப்பதாக புகார் அளித்துள்ளனர்! 

இதனால் ஆசியான் நாடுகள் பட்டியலில் வியட்னாம், Philipines, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் மிக அதிக மோசடியை எதிர்கொள்ளும் முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக மலேசியாவும் இருக்கிறது.

ஆசிய நாடுகள் பட்டியலில் முதல் ஏழு நாடுகள் பட்டியலுக்கு மலேசியா முன்னேறியிருப்பதாக உலகளாவிய மோசடி எதிர்ப்பு கூட்டணி தெரிவித்துள்ளது.

மலேசியர்களின் வாங்கும் திறன் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்றும், இதனால் நாம் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்குகளாக மாறுகிறோம் என்றும் அந்த அரசு சாரா அமைப்பு (NGO) கூறுகிறது.

------

ஊதிய உயர்வும் வாங்கும் சக்தியை மேம்படுத்துவதும் மலேசியாவின் செழிப்புக்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன! 

 

வெளிநாடுகளின் நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்பான பணியை செய்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், மக்களின் சம்பள உயர்வு குறித்தும் அதிக மேம்பாடுகளை செய்ய வேண்டியிருப்பதாக, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் Dr. Azeem Fazwan Ahmad Farouk கூறியுள்ளார்.

 

மடானி அரசாங்கத்தின் நான்காண்டுகள் ஆட்சிக் காலம் நிறைவடைந்திருப்பதை அடுத்து, Astro Awani மேற்கொண்டு சிறப்பு மும்முனை கலந்துரையாடல் ஒன்றில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-------

 

ராணுவப் படையின் வசதிகளை போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில் இன்று மூன்று அரச மலேசிய வான்படை அதிகாரிகள் உள்ளிட்ட அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

 

அதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் எழுவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புக்கிட் அமான் போதை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் தெரிவித்தார்.

 

ஏழு TUDM அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 பேர் இவ்விவகாரத்தில் கடந்த வாரம் கைதாகினர்.

 

------- 

 

ஆகக் கடைசி தகவல்படி சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது! 

 

பேராவில் இருநூருக்கும் மேற்பட்டோர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

-------

 

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்! 

 

இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம். 

 

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு. 

 

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

RAAGA Aaha Siranta Isai!