Skip to main content
ஆகாயப்படைத் தளங்களில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் !

 

ஆகாயப்படைத் தளங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில், உள்துறை அமைச்சு விரிவான அறிக்கையை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது !

அதே வேளை, நாட்டின் முக்கியமான இராணுவத் தளங்களின் பாதுகாப்பு குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக, உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்விவகாரம் குறித்து, தாமும் தற்காப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin-னும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவிருப்பதாக, Datuk Seri Saifuddin Nasution Ismail கூறினார்.

அச்சம்பவம், நாட்டின் தற்காப்பு அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து, பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் சொன்னார்.

----------

இதனிடையே, ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என, தேசிய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளர் !

அந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில், மலேசிய அரச ஆகாயப்படையைச் சேர்ந்த 7 பணியாளர்களும், 6 பொதுமக்களும் அடங்குவர்.

--------

மடானி அரசாங்கத்தின் நான்காண்டுகால ஆட்சியில், பல்வேறு சாதனைகள் எட்டப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து வரும் சவால்களும், அரசியல் நகர்வுகளும் கவனம் பெற்றுள்ளன !

இந்நிலையில், சீர்திருத்தம் தொடர்பான வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் பலம், பலவீனம் மற்றும் அதன் ஆட்சியின் நீண்டகாலத் தாக்கம் என்ன என்பது குறித்து, Dialog Tiga Penjuru நிகழ்ச்சி ஆராய்கிறது.

அந்நிகழ்ச்சியை, இன்றிரவு மணி 8.30-க்கு, Astro Awani அலைவரிசை 501-றில் கண்டு களிக்கலாம்.

--------

வரும் ஞாயிறு காலை நடத்தப்படவுள்ள MySiren முறை அல்லது தேசிய முன்னெச்சரிக்கை முறைக்கான பொது சோதனை குறித்து, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியிருக்கிறது !

பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளில், அவசரக்கால எச்சரிக்கைகள் அம்சத்தை முடுக்கிவிடும்படியும்,  கைப்பேசி மென்பொருளை அதன் மிக அண்மைய பதிப்புக்கு புதுப்பித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

---------

உடல்நலம் குன்றியவர்கள், சபரிமலை மலை ஏறுவதை தவிர்த்துக்கொள்ளும்படி, இந்திய கேரளம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது !

அண்மையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உட்பட எழுவர், மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, அந்த அரசு அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

-------

Astro Ulagam ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இளம் செய்தி வாசிப்பாளர் தேடலின் இரண்டாம் கட்டத்திற்கு 25 பங்கேற்பாளர்கள் தேர்வாகியுள்ளனர் !  

இம்மாதம் 30ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான பங்கேற்பாளருக்குப் பொதுமக்கள் வாக்களிக்கலாம்.  

வாக்களிப்போர் ஒவ்வொருவருக்கும் நாளுக்கு ஐம்பது வாக்குகள் வரை செலுத்த அனுமதி உண்டு.  

வாக்களிப்புத் தளம் உள்ளிட்ட மேல் விவரங்களுக்கு Astro உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

RAAGA Aaha Siranta Isai!