Skip to main content
ஆலோசனை ஆசிரியர்கள் தேவை- NUTP வலியுறுத்து!

 

 

அனைத்து பள்ளிகளிலும் போதுமான எண்ணிக்கையில், ஆலோசனை ஆசிரியர்கள் இருப்பதை, கல்வியமைச்சு உறுதி செய்ய வேண்டும் !

 

மாணவர்களின் ஒழுக்கப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அது அவசியமாவதாக, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் NUTP தெரிவித்துள்ளது.

 

பள்ளிக்குள் நடக்கும் பகடிவதை உள்ளிட்ட ஒழுங்கீன நடத்தைகள், மனநலப் பிரச்சினைகள் போன்றவற்றைக் கையாள, போதுமான பயிற்சி பெற்ற ஆலோசனை ஆசிரியர்கள் இல்லை என அச்சங்கம் கூறியது.

 

அம்மாதிரியானப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் பொறுப்பை ஆசிரியர்கள் மீது மட்டும் சுமத்த முடியாது.

 

அதற்குத் தேவையான சிறப்புப் பயிற்சி, அனைவருக்கும் இல்லை என NUTP வலியுறுத்தியது.

 

அண்மையில், சிலாங்கூர் பந்திங்கில் உள்ள ஒரு பள்ளியில், 15 வயதுடைய மாணவர் ஒருவர், மூன்றாம் படிவ மாணவரை, கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

---------

 

KEMAS மழலையர் பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோருக்கான தகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சமூக மேம்பாட்டுத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது !

 

தற்போது, ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில், இளங்கலை பட்டயம் பெற்றவர்களுக்கு மட்டுமே அப்பொறுப்பு வழங்கப்படுகிறது.

 

அதனை மற்ற சம்பந்தப்ப்ட்ட கல்வித் துறை பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 

KEMAS கல்வித் திட்டங்களில், தற்போது நவீன தொழில்நுட்ப வகுப்பறைகள் மற்றும் மதியிறுக்க கல்வி போன்ற புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

--------

 

பிரதமர், SARA உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை, விரைவில் அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மீண்டும் தெரிவித்துள்ளார் !

 

அத்தியாவசியப் பொருட்களின், விலை உயர்வால் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவீனச் சுமையை குறைக்கும் நோக்கில், இந்நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் கூறினார்.

 

---------

 

கடந்த மாதம் Venezuela-வில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய 5-ஆயிரத்து 400-ஆகப் பதிவாகியுள்ளது !

 

---------

 

மே மாதம் அறிவிக்கப்பட்ட எபோலா வைரஸ் நோய் பரவல், காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!