
அமைச்சரவையில் மாற்றம் செய்ய இப்போதைக்கு எந்த அவசியமும் இல்லை!
மடானி அரசாங்கம் நிலையாகவும் வலுவாகவும் இருப்பதாகக் கூறிய பிரதமர் DSAI, அண்மைய காலமாக எழுந்து வரும் அமைச்சரவை மாற்றம் குறித்த ஆருடங்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கொள்கைகளில் கவனம் செலுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனது கடமையை தமது அமைச்சரவை தொடர்ந்து சீராக மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து Anthony Loke விலகியதைத் தொடர்ந்து எழுந்து வரும், அமைச்சரவை மாற்றம் குறித்த ஆருடங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக பிரதமர் அவ்வாறு கூறினார்.
-----
இதனிடையே நெகிரி செம்பிலான் மாநில Menteri Besar பதவியிலிருந்து விலகும் Datuk Ismail Lasimமின் கடிதத்தை தமது தரப்பு பெற்றிருப்பதை தேசிய முன்னணி உறுதிப்படுத்தியிருக்கிறது.
நேற்று அவர் தனது பதவி விலகும் கடித்தத்தை மாநில ஆட்சியாளர் Tuanku Muhriz Tuanku Munawirரிடம் ஒப்படைத்தார்.
புதிய Menteri Besar வேட்பாளர் பரிந்துரையை BN விரைவில் Tuanku Muhrizசிடம் முன்வைக்கும்.
------
இரு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வந்திறங்கியுள்ளார் France நாட்டு அதிபர் Emmanuel Macron!
நேற்றிரவு மணி 11 வாக்கில் குவாலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கிய அவர், இன்று பிரதமருடன் இரு நாடுகளின் நல்லுறவு, வியூகக் கூட்டமைப்பு ஆகியவை குறித்து கலந்து பேச அட்டவணையிடப்பட்டுள்ளார்.
-----
இந்தோனேசிய காட்டுத் தீ விவகாரத்தில் மலேசிய நிறுவனங்களுடன் தொடர்பிருப்பதாக எந்த ஒரு வலுவான ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை!
மலேசிய தோட்டத்தொழில் நிறுவனம் ஒன்றுடன் அதற்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவது குறித்து தமது தரப்பு தீர ஆராய்ந்துவிட்டதாகவும், அதற்கு ஆதாரம் இல்லை என்றும், இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் தெரிவித்தார்.
------
Philipinesசில் போதை பொருள் சோதனை நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட மலேசியர் எனக் கூறப்படும் நபரின் அடையாளங்களை காவல் துறை ஆராய்ந்து வருகிறது.