Skip to main content
ஆம்புலன்ஸ் சேவையில் பின்னடைவு !

நாட்டில் அவசர ஆம்புலன்ஸ் சேவைகளில், கடந்தாண்டில் 34.1 விழுக்காடு மட்டுமே 15 நிமிடங்களுக்குள் நோயாளிகளைச் சென்றடைந்துள்ளன!

அது, அரசாங்கம் நிர்ணயித்த 50 விழுக்காடு இலக்கை அடையாத நிலை என சுகாதார அமைச்சர் Datuk Seri dr Dzulkefly Ahmad நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவையை விரைவுபடுத்தவும், அவசர உதவி அழைப்பு 999 அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவசர மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து, தேசிய அளவில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கைகளை அதிகரிப்பதோடு, ஆம்புலன்ஸ் அனுப்பும் முறைகளும் மேம்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

நெகிரி செம்பிலான் jelebu-வில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர், 500 மீட்டருக்கும் குறைவான அதாவது அருகிலே மருத்துவமனை இருந்தும் ஆம்புலன்சுக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக 2027 வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு 400 புதிய ambulansசுக்கான ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

--

ஜனவரி 1 தொடங்கி, சாலை போக்குவர்த்து துறை, JPJ அலுவலகங்களில் மூன்றாம் தரப்பினரின் வேலைகளைச் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்களாகப் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அந்த இடைத்தரகர்களுக்கான பதிவு, நவம்பர் 1 முதல் இணையம் வழியாகத் தொடங்கும் என JPJ தெரிவித்துள்ளது.

அதே வேளை, பொதுமக்கள் MyJPJ செயலி மற்றும் JPJ அதிகாரப்பூர்வ இணையதளம் போன்ற வழிகளைப் பயன்படுத்துமாறு அது அறிவுறுத்தியது.

--

பஹாங், குவாந்தானில் கடந்த வாரம்  Polytechnic மாணவியைக் கொலை செய்ததாக, 19 வயது ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

--

பேராக், ஈப்போவில் Telekom மலேசியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கேபிள்களைத் திருடியதாக 20 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

 

RAAGA Aaha Siranta Isai!