Skip to main content
Ambulans-சின் நடவடிக்கை நேரம் குறைவே!

 

 

உயிரிழப்பு அபாயம் மாதிரியான சமயங்களில் சம்பவ இடத்திற்கு Ambulans வாகனங்கள் விரையும் respons time இன்னமும் தேசிய இலக்கை எட்டவில்லை!

 

50 விழுக்காடு இலக்கு வைக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு 34 விழுக்காடு மட்டுமே அவ்விலக்கு கைகூடியதை சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad ஒப்புக் கொண்டுள்ளார்.

 

எனினும் NG MERS 999 அமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நடவடிக்கை அவகாசத்தைக் குறைத்து, ambulans வாகனங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

 

முன்னதாக 2027 வரவு செலவு திட்டத்தில் KKMமுக்கு 400 புதிய ambulansசுக்கான ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

------

 

இதனிடையே 2027 வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ததிலிருந்து முதல் நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெறுகிறது!

 

அதில் பட்ஜட் குறித்த விவாதங்கள், சுகாதாரத் துறையில் உள்ள இடைவெளிகள், மின்சாரத் துறை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

------

புகைமூட்டம் காரணமாக அவ்வப்போது பள்ளிகள் மூடப்படுவதும், பெற்றோரின் நிர்வாக வேலைகளை எளிமையாக்கக் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அவற்றை மூடுமாறும் முன்வரும் கோரிக்கைகளை கல்வி அமைச்சு நன்கறிந்துள்ளது!

 

என்றாலும் புகைமூட்ட நிலவரம் நேரத்தை பொருத்து, இடத்தைப் பொருத்து மாறிக் கொண்டே இருப்பதால், பொதுவான அறிவிப்பை கொடுத்து பள்ளிகளை மூடிவிட முடியாது என, அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.

 

நிலைமையைக் கண்காணித்து, சுகாதாரம் கருதி இடத்திற்கு ஏற்ற, அதே சமயம் கற்றல் கற்பித்தல் தரத்தையும் பாதிக்காத வண்ணம் முடிவை தமது தரப்பு எடுக்க வேண்டியுள்ளது என, அவர் தனது Facebookகில் விளக்களமித்துள்ளார்.

 

------

 

ஆகக் கடைசி தகவல்படி நாட்டின் 23 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது. 

 

ஜொகூர், நெகிரி செம்பிலான், பஹாங், திரங்காணு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

 

----

 

கெடா, பினாங்கு, பேராவில் குறிப்பிட்ட சில இடங்களில் இன்று மதியம் இரண்டு மணி வரை மழை பெய்யக்கூடும் என MetMalaysia கணித்துள்ளது.  

 

தலைநகர் Kuala Lumpurரில் ஆங்காங்கே மழை பெய்துக் கொண்டிருக்கும் நிலையில், மதியம் வரை பெரும்பாலான இடங்களில் அந்த வானிலை தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

RAAGA Aaha Siranta Isai!