Skip to main content
அனைத்து ATM-மிலும் RM1 கட்டணம் விலக்கு அல்ல !

அனைத்து ATM இயந்திரங்களிலும் 1 ரிங்கிட், பணம் பட்டுவாடா கட்டணம் ரத்து செய்யப்படவில்லை.

நாட்டில் உள்ள 16,000 ATM இயந்திரங்களில், சுமார் 84 விழுக்காடு, வங்கிகளுக்குச் சொந்தமானவை.

எஞ்சியுள்ள 16 விழுக்காடு ATM இயந்திரங்கள், தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

எனவே, தற்போது 1 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுவது ,அந்த தனியார் நிறுவன ATM இயந்திரங்களில் மட்டுமே என, அரசாங்க பேச்சாளர் Datuk Fahmi Fadzil தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, அந்த கட்டண ரத்து நடவடிக்கை, குறிப்பாக கிராமப்புறம் மற்றும் தொலைதூர பகுதிகளில், ஒரே ATM மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

----------

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தது ஒரு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படவுள்ளார் !

மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பள்ளிகளில் ஆபத்து நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவும், கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளி பாதுகாப்பு நிர்வாக வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர் பாதுகாப்புக் கொள்கையின் கீழ், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

----------

Negeri Sembilan-னில், SPM தேர்வெழுதும் மாணவர் உட்பட, மொத்தம் 195 பேர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதியானதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது !

----------

ஜொகூர் BATU PAHAT-டில், வெண்பலகை அழிப்பானைத் தூக்கி எரிந்து, 7 வயது மாணவரை காயமடைய வைத்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, 47 வயது ஆசிரியை மறுத்துள்ளார் !

----------

சிலாங்கூர் AMPANG JAYA-வில், இளைஞன் ஒருவன் மசூதி அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!