Skip to main content
API குறியீடு அபாய அளவை தொட்டுள்ளது!

 

 

சபா மற்றும் சரவாக்கில் காற்றின் தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!

 

ஆகக் கடைசி தகவல்படி சரவாக்கில் Serian, Kuching, Samarahan, என சரவாக்கின் ஆறு பகுதிகளில் அபாய அளவைத் தொட்டுள்ளது.

 

அவ்விடங்களில் API குறியீடு முன்னூரைக் கடந்துள்ளது.

 

முக்கா, Bintulu, Samalaju ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிக ஆரோக்கியமற்ற அளவில்  உள்ளது.

 

மிரி, சபாவின் Kimanis, Keningau, Labuan, சிலாங்கூரின் Johan Setia என, மொத்தம் 9 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.

 

-----

இதனிடையே காற்றின் தரத்தை குறிக்கும் API குறியீடு ஐநூரைக் கடந்தால் அவசரநிலை அறிவிக்கப்படும் என மாநில துணை முதலமைச்சர் கூறினார்.

 

எனினும் அது பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே என அவர் தெரிவித்தார்.

 

-----

 

நேப்பாலில் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மலேசியாவில் உள்ள சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவை அனுப்ப தயார்!

 

உதவிக்கு நேப்பால் அரசாங்கம் பச்சை கொடி காட்ட காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

------
இன்று தொடங்கி புடி மடானி திட்டத்தின் கீழ் மானிய விலையிலான பெட்ரோல் ஒதுக்கீடு மீண்டும் முன்னூரு லிட்டர் ஆக்கப்படுகிறது.

 

மேம்படுத்தப்பட்ட விநியோக நிர்வாகம், கடுமையான அமலாக்கம் மற்றும் அரசாங்கத்தின் வலுவான நிதி நிலையே இதற்கு வழிவகுத்திருப்பதாக நிதியமைச்சு தெரிவித்தது.

 

----

 

Putrajayaவில் நேற்று நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டதாக அரசாங்கம் கணக்கிட்டுள்ளது!

 

இது இலக்கு வைக்கப்பட்ட 80 ஆயிரம் பார்வையாளர்களை விட அதிகம்.

 

 

RAAGA Aaha Siranta Isai!