
அரசாங்க நிகழ்வுகள், நடவடிக்கைகள், பட்டறைகள் போன்ற நிகழ்ச்சிகள் குறைக்கப்பட வேண்டும் என, பிரதமர் தெரிவித்திருக்கின்றார் !
அனைத்து அமைச்சுகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுடன் தொடர்புள்ள நிறுவங்களுக்கு, அந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, தொடர்புத் துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
இது, அரசாங்க திட்டங்களைச் சீரமைக்கும் முயற்சிகள் மற்றும் உலகளாவிய விநியோக சவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட,நடவடிக்கையாகும்.
---------
பினாங்கில் சித்திரை பௌர்ணமி திருவிழாவுக்கு வருகை புரியும் பக்தர்களும், வருகையாளர்களும், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் !
முடிந்தளவுக்கு, மக்கும் தன்மை கொண்ட நெகிழிப் பைகளைப் பயன்படுத்தும்படி, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆங்காங்கே பந்தல்களில் வழங்கப்படும் உணவுகளை வீணடிக்காமல் இருக்கும்படியும் அச்சங்கம் கூறியது.
---------
ஜொகூரின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர், கோத்தா திங்கியில் துப்பாக்கி பயிற்சியின் போது, தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சம்பவம் தொடர்பில், 9 பேரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது !
முன்னதாக வெளிவந்த செய்திகளின்படி, பாதிக்கப்பட்டவர் துப்பாக்கி பயிற்சி மைதானத்தில், பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக கூறப்படுகிறது.
----------
கோலாலம்பூர் MEX விரைவுச்சாலையில் மது போதையில் வாகனமோட்டி, வங்காளதேச இளைஞனின் உயிரிழப்புக்குக் காரணமானதாக கூறப்படும் ராணுவ வீரரின் தடுப்புக் காவல், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது !
---------
இந்தோனேசியா ஜகார்த்தா அருகே அண்மையில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்த 15 பேரும், பெண்களாவர் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் !