தலைநகரில், அரசாங்க நிலத்தில் கட்டப்பட்ட சுமார் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
அவ்விவகாரத்தை அரசாங்கம், கட்டமைக்கப்பட்ட சட்டத் திட்டங்களுக்கேற்ப நியாயமான அணுகுமுறையில் கையாளும் என பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.
கூட்டரசு பிரதேச துறை , நாடாளுமன்றத் தொகுதிகள் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிப்பாட்டு தலங்களின் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் 11 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்புடைய தரப்புகளுடன் கலந்துரையாடப்படும் என அவர் கூறினார்.
மேலும்,முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
--
பினாங்கு, Bukit Mertajam-மில் மறுசுழற்சி தொழிற்சாலையின் குப்பைக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க பத்து மணி நேரம் ஆனது.
எண்பது விழுக்காடு சேதம் ஏற்பட்டதாகவும், உயிருடற் சேதம் ஏதுமில்லை என தீயணைப்பு மீட்பு துறை தெரிவித்துள்ளது.
--
Jalan Tapah – Cameron மலை நோக்கிச் செல்லும் சாலையில், நேற்றிரவு வாகனம் ஒன்று மூன்று மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார்; அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயமடைந்தனர்.
--
பேராக், ஈப்போவில் கார் கண்ணாடியை உடைத்து சேதம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் உள்ளூர்வாசி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அச்சம்பவம் குறித்த காணொலி முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலாகியது.
--
சரவாக், Santubong மலையில் நேற்று மாலை வாக்கில், ஏறிய மலையில் இருந்து இறங்கும் போது, ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் கடினமாக இருப்பதாக மாநில தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரைத் தொடர்புக்கொண்ட போது, அவர் பாதுகாப்பாக இருப்பதாகாவும் சிக்கிய பகுதியிலிருந்து வெளியேற சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.