
அரசாங்கம், BERSATU கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது !
அதன்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்குள், பிரதமரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்துவது, சட்டத்துறைத் தலைவர் மற்றும் அரசத் தரப்பு துணை தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் பொறுப்புகளைப் பிரிப்பது உள்ளிட்ட இரண்டு முக்கிய சீர்திருத்தங்களை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
பெர்சத்து கட்சித் தலைவர் Tan Sri Muhyiddin Yassin தலைமையிலான அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கம், தாங்கள் கோரும் இரண்டு முக்கிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால், 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பெர்சத்துவுக்கு தற்போது 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் 13 பேர், எதிர்க்கட்சித் தலைவரும் பெர்சத்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவருமான, Hamzah Zainudin-னுக்கு ஆதரவாக உள்ளனர்.
-------
தீபாவளியை முன்னிட்டு, விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன !
பெரிய சிவப்பு வெங்காயம், இந்தியச் சிறிய வெங்காயம், இந்திய ரோஸ் வெங்காயம், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்படும் எலும்புடன் கூடிய செம்மறி ஆட்டிறைச்சி, ஆஸ்திரேலிய பருப்பு, தக்காளி, முழுத் தேங்காய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவை அதிலடங்கும் .
நவம்பர் 4 முதல் 10-ஆம் தேதி வரை, அந்த விலை கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
---------
இதனிடையே, கெடாவில் வெள்ளத்தால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் !
சபாவில் 21 பேர், வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
---------
இந்தியா ஆந்திரப் பிரதேசத்தில், Arnab சூறாவளி தாக்கி, குறைந்தது அறுவர் உயிரிழந்துள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன !
-----------
Astro, தனது 30-வது ஆண்டு நிறைவையொட்டி, ஒன்றிணைந்து கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில், தீபாவளிக்காக 75 மணி நேர சிறப்புப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது !
உள்ளூர் தயாரிப்புகள், புதிய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன், Sony Vizhha அலைவரிசை 220 எனும், புதிய தமிழ் பொழுதுபோக்கு அலைவரிசையையும் Astro அறிமுகப்படுத்தியுள்ளது.
ராகா மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், தீபாவளிக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் Astro வழங்குகிறது.
அக்டோபர் 30-ஆம் தேதி, Bukit Jalil தேசிய அரங்கு, கார் நிறுத்துமிடம் B-யில், 2026 தீபாவளி கார்னிவல் நடைபெறும் வேளை, அதற்கு மறுநாள், Brickfields கலாமண்டபத்தில் ECR Indian Shopping Carnival நடைபெறுகிறது.