Skip to main content
அரசாங்கத்தின் மானிய விலைகள் தொடரும் !

உலகளாவிய எண்ணெய் நிலவரம் நிச்சயமற்றதாக இருந்தாலும், அரசாங்கத்தின் மானிய விலைகள் தொடரும் ! 

நிதியமைச்சு அதனைத் தெரிவித்துள்ளது. 

அடுத்த ஒரு வாரத்திற்கு, RON95 ரக பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாகவே தொடர்கிறது. 

மானியம் இல்லாத RON95 பெட்ரோலின் விலை 4 ரிங்கிட் 27 சென்னாக உயர்ந்துள்ளது. 

தீபகற்பத்தில்,  டீசல் விலை லிட்டருக்கு 6 ரிங்கிட் 72 சென்னாக உயர்ந்தாலும், Sabah, Sarawak, Labuan பகுதிகளில் 2 ரிங்கிட் 15 சென்னாகவே உள்ளது. 

முந்தைய வாரங்களின் சராசரி அடிப்படையில் உள்ளூர் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் உடனடி குறைப்பு இல்லை என அமைச்சு தெரிவித்தது. 

முன்னதாக, BUDI95 திட்டத்தின் மாதாந்திர வரம்பு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டர் ஆக மறுசீரமைக்கப்பட்டது. 

BUDI Diesel உதவி ஏப்ரல் ஒன்று  முதல் 100 ரிங்கிட் கூடுதலாக வழங்கப்பட்டு இப்போதைக்கு முன்னூறு ரிங்கிட்டாக உள்ளது. 

-- 

பினாங்கில் எரிபொருள் தட்டுபாடுகள் குறித்த கவலை வேண்டாம் ! 

எரிப்பொருள் நிறுவனம் ஒன்றின் விநியோகத்தில் நேற்று ஏற்பட்ட தாமதம், அந்நிறுவனத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாகவே என உள்நாட்டு  வாணிப  மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.  

மற்ற நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் தொடர்ந்து எளிதாகக் கிடைக்கிறது என்றும் அது விளக்கியது. 

-- 

இதனிடையே, பினாங்கில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை ! 

அனைத்து துறைகளிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

-- 

2025 SPM தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற 6,700 க்கும் மேற்பட்ட  மாணவர்கள் matriculation திட்டத்தில் தானாகவே சேரத் தகுதி பெறுவார்கள் ! 

அது, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இனமத பின்னணி பாராமல் வழங்கப்படும் என கல்வி அமைச்சு கூறியது. 

RAAGA Aaha Siranta Isai!