Skip to main content

Advertisement

அரிவால் பட்டு மாணவன் பலி- தீவிர விசாரணை வேண்டும்!

 

பேராக் Teluk Intan-னில் 18 வயது மாணவன் ஒருவன் அரிவால் பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட வேண்டும்! 

இம்மாதிரியான சம்பவங்கள் வேலையிட பாதுகாப்பின்மை மற்றும் ஆபத்தான உபகரணங்களைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய தர செயல்பாட்டு நடைமுறைகள் சரியாக இல்லாததைக் காட்டுகிறது என, மலேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சங்கம் கூறியிருக்கிறது. 

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மட்டுமல்ல, முதலாளியும் கூட கவனக்குறைவு குற்றத்தின் பேரில் நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டும் என, அச்சங்கம் வலியுறுத்தியிருக்கிறது. 

இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்ற இரு வெளிநாட்டு தொழிலாளர்கள் வைத்திருந்த அரிவால் பட்டு, ஒரு மாணவன் உயிரிழந்தான். 

மற்றொரு மாணவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 

-----  

திரங்காணுவில், ஆறாண்டுகளுக்கு முன் SPM மாதிரி தேர்வின் போது தனது ஆடையினுள் கைப்பேசியை ஒளித்து வைத்திருந்த மாணவி தொடுத்திருந்த வழக்கை, Sessions நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! 

ஆசிரியர்கள் பிற மாணவர்கள் முன்னிலையில் தம்மிடம் கைப்பேசி இருக்கின்றதா என்பதை சோதனையிட்டு தனது தன்மானத்திற்கு இழுக்கை ஏற்படுத்தியதாகவும், இது அவருக்கு மன அழுத்தத்தைத் தந்துள்ளதாகவும் கூறி அவர் அந்த வழக்கை தொடுத்திருந்தார். 

எனினும் ஆசிரியர்களின் அச்செயல் நியாயமானது என்றும், விதிமுறையை மீறி தேர்வு அறைக்குள் கைப்பேசி எடுத்து வந்து தவறு செய்தது அம்மாணவி தான் என்றும் கூறி, நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளிபடி செய்தது. 

-----  

இனம், மதம் தொடர்பான கருத்துகளை முன்வைத்து சர்ச்சையைல் சிக்கியிருக்கும் பிரபல ஆர்வளர் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், காவல் துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது! 

விசாரணை நல்ல பலனைத் தந்துள்ளதாகக் கூறிய சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர், இப்போதைக்கு எந்த தகவலையும் வெளியிட முடியாது என கூறிவிட்டார். 

அடையாளம் தெரியாத சிலர் சம்பந்தப்பட்ட நபரை மிரட்டியதாகவும், வீடு புகுந்து அவரது உடைமைகளை அடித்து உடைத்ததாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது. 

------  

இந்தியா தமிழகத்தில் உள்ள மதுரை விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாகத் தரமுயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து தமிழக்கத்தில் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள் வரிசையில் நான்காவது சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையமும் சேர்ந்துள்ளது. 

-----  

Switzerlandதில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது அறுவர் பலியாகினர். 

தீக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

RAAGA Aaha Siranta Isai!