Skip to main content
ஆறு நொடியில் உறங்க வைக்கும் Trend- அபாயம்!

 

சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஆறு நொடிகளில் உறக்கம் வர வைக்கும் trend ஒன்று குறித்து கவனமாக இருங்கள்! 

கழுத்தின் ஒரு பகுதியிலுள்ள நரம்பை அழுத்தி தூக்கம் வர வைப்பது மாதிரியான அந்த நடவடிக்கை உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

இந்த முறை மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது உறக்கத்திற்கான சிறந்த வழி என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் அவ்வமைச்சு கூறியது. 

---- 

விரும்பத்தகாத உள்ளடகங்களை இணையத்திலிருந்து நீக்கும்படி கோரி, சேவை வழங்குனர்களுக்குக் கொடுக்கப்படும் புகார்கள் அதிகரித்து வருவதாக, தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

அவற்றுள் 60 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் ஆகும்.  

----  

கிளாந்தான், Kuala Kraiயில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த சம்பவம் தொடர்பில் மாநில காவல் துறை இதுவரை பத்து பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.  

அந்த 29 வயது மருத்துவர், ஊழியர் தங்கும் விடுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.  

---  

பினாங்கு, Seberang Jaya மருத்துவமனையில் உள்ள சிறார் பராமரிப்பு மையத்தில், நான்கு மாத சிசு உயிரிழந்த விவகாரம் தொடர்பில், மாநில காவல் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.  


கிள்ளான் துறைமுகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் பலனாக, எல்லை கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு அமைப்பு, கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐநூரு டன்னுக்கும் மேற்பட்ட எடையிலான மின்னியல் கழிவுகளை பிடித்துள்ளது.  

  

RAAGA Aaha Siranta Isai!