Skip to main content
சாலை விபத்து உயிரிழப்புகள் 50% குறைப்பு இலக்கு !

 

2030-ஆம் ஆண்டுக்குள், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை, 50 விழுக்காடு குறைக்க அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது !

குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் உயிரிழப்புகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என, துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த, அமைச்சுகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களைக் குறைப்பதில் பயனளிப்பதை உறுதி செய்வதே நோக்கம் என அவர் சொன்னார்.

கடந்தாண்டு சாலை விபத்துகளில் 6,537 பேர் உயிரிழந்தனர்.

அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 18 பேர் உயிரிழந்தனர்.

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் சுமார் 66 விழுக்காட்டினர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகளாவர்.

இதனிடையே, நேற்று மட்டும், 1,400-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்ட வேளை, அதில் 13 மரணங்கள் பதிவாகின.

-------

பஹாங் Bukit Tinggi-யில், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்தில் உள்ள சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இதுவரை எந்தவொரு சிசிடிவி கேமிரா காட்சியும், நேரடி சாட்சிகளும் கிடைக்கவில்லை என, காவல்துறை தெரிவித்துள்ளது !

இச்சம்பவம் தொடர்பில், 3 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அத்துறை கூறியது.

---------

மலக்காவில் கடையொன்றின் முன், வியாபாரத் தளம் தொடர்பான கருத்து வேறுபாட்டால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில், ஆடவர் ஒருவர் தலையில் குத்தப்பட்ட சம்பவத்தை, காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது !

---------

2026 தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, Lagu KITA எனும் சிறப்புப் பாடலை வெளியிட்டுள்ளது Astro Audio !

தேசப்பற்று உணர்வை அதிகரிப்பதுடன், நாட்டின் பன்முகக் கலாசாரத்தை கொண்டாடி, மலேசியர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், அப்பாடல் வெளியிடப்பட்டது.

அதில் ராகா அறிவிப்பாளர்கள், உதயா மற்றும் மஹேனும் இணைந்து பாடியுள்ளனர்.

அதோடு, KITA FM, நாடு முழுவதும் பல இடங்களுக்குச் சென்று, பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!