
2025-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில், முழு 11 A-க்களைப் பெற்று, பள்ளியின் ஒரே ஒரு மிகச் சிறந்த மாணவியாக திகழ்ந்துள்ளார் மாணவி துளசி தேவி !
கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர் தான் இவர்.
அந்த தருணம் மறக்கவே முடியாததொன்று என அவர் ராகா செய்திப் பிரிவிடம் பகிர்ந்துகொண்டார்.
எந்நேரமும் புத்தகக் கையுமாக இல்லாமல், படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பு, மற்ற நேரங்களில் வழக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டுதான், தமிழ்ப்பள்ளியில் பயின்ற அம்மாணவி இந்தவொரு சாதனையை புரிந்துள்ளார்.
அந்த பள்ளியில் இதுவரை எந்தவொரு மாணவரும் எட்டாத சாதனையைப் பதிவு செய்தவர் என்ற பெறுமையையும், தமிழ்ப்பள்ளி பின்னணியிலிருந்து வந்த துளசி பெறுகிறார்.
----------
கடந்த ஈராண்டுகளில், போதையில் ஏற்படும் உயிரிழப்பை உட்படுத்திய 58 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
2024-இல், 27 விபத்துகள் பதிவான வேளை, கடந்தாண்டில் 31 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
-------
இதனிடையே, போதையில் வாகமோட்டுபவர்களைப் பிடிக்க, நள்ளிரவு மற்றும் வார இறுதி நாட்களில், சாலை சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என புக்கிட் அமான் தெரிவித்துள்ளது !
அந்நடவடிக்கைகள், சாலைப் பயணிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி, தவறுகளைத் தடுக்கும் உளவியல் தாக்கத்தையும் உருவாக்கும் என அது சொன்னது.
--------
வெப்பம் தொடர்பான அறிக்கை, அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் !
அதன் பின்னரே, வறண்ட நிலை மற்றும் வெப்பத்துக்கு எதிரான தலையீட்டு நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும் என இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் கூறினார்.
-------
இந்தோனேசியாவில் இன்று மாலை 3 மணி வாக்கில், 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ; எனினும் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை !