Skip to main content
செப்பாங் பந்தையளத்தில் மோட்டார் சைக்கிளுக்குத் தடை!

 

 

இந்தோனேசியாவின் எல்லையைக் கடந்து பரவும் புகைமூட்டத்தைக் கையாள உதவ மலேசியா எப்போதும் தயார்!

ஆனால் தீயைக் கட்டுப்படுத்த உதவி வழங்குவது குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பதிலுக்காக இன்னமும் மலேசியா காத்திருக்கிறது என, அரசாங்க பேச்சாளர் DS Fahmi Fadzhil தெரிவித்தார்.

Wisma Putra வாயிலாக இந்தோனேசியா பதில் கொடுத்த பிறகே, அரசாங்க உபகரணங்களை அதிகாரப்பூர்வமாக உதவிக்கு அனுப்ப முடியும் என்றார் அவர்.

இதனிடையே ஆகக் கடைசி தகவல்படி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நெகிரி செம்பிலானில் எட்டு இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது.

------

வார இறுதியில் நடைபெறும் Bahrain F1 GP பந்தையத்தை ஒட்டி, செப்பாங் அனைத்துலக பந்தையத்தள வளாகத்தில் மோட்டார்சைக்கிள் நுழைய அனுமதி இல்லை!

அப்பகுதியில் நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதுவும் ஒன்று என, அப்பந்தையத்தளத்தின் தலைமை செயல்முறை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அப்பந்தையத்தளத்தில், எல்லா வகை வாகனங்களும் நுழைய கொடுக்கப்படும் சுதந்திரமே, அங்கு ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் நெரிசல் ஏற்பட முதன்மை காரணம் என்பது நிரூபணமாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-----

 

இதனிடையே இவ்வார இறுதியில் குவாலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIAவிலிருந்து பயணம் செய்யவிருப்போ அங்கு செல்லும் தங்களின் பயணத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்!

 

Bahrain GP பந்தையத்தை ஒட்டி, செப்பாங்கில் நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், விமான நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

 

அதே சமயம் KLIAவைச் சுற்றியுள்ள சாலைகள் சில மூடப்பட்டு, சில சாலைகள் திருப்பிவிடப்பட்டிருக்கும் நிலையில், அவற்றின் அண்மைய தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளும்படி அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன.

 

-----

 

தீபகட்பத்தில் இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கான எரிபொருள் விலை ஐந்து சென் குறைகிறது!

 

ரோன் 97 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரிங்கிட்டாகவும், உதவித் தொகை வழங்கப்படாத ரோன்95 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு ரிங்கிட் 52 சென்னாகவும் விற்கப்படும்.

 

டீசல் விலை 15 சென் சரிந்து லிட்டருக்கு ஐந்து ரிங்கிட் 27 சென்னாக உள்ளது.

 

----

துபாயிலிரிந்து 170க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்ரேல் புறப்பட்ட  விமானம் ஒன்று, விமானிகளுக்கு இடையே நடந்த கைகலப்பால் தடுமாறி கீழ் நோக்கி சரிந்தது பயணிகளிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது!

ஓமனைச் சேர்ந்த இணை விமானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை விமானி மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அம்மோதலுக்கு நடுவிலும் முதன்மை விமானி விமானத்தைப் பாதுகாப்பாக தரையிறக்கினார்.

விமானம் அவசர அவசரமாக செளதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

 

RAAGA Aaha Siranta Isai!