Skip to main content
செய்தி | நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை !

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களால், நாட்டில் இப்போதைக்கு உணவுப் பற்றாக்குறை ஏதும் இல்லை ! 

அவ்வாறு விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெரிவித்துள்ளது. 

விநியோகம் போதுமானதாக இருக்கும் வரை விலைகளும் நிலையாக இருக்கும் என அமைச்சு கூறியது.  

-- 

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை, உயர்கல்வி கூட மாணவர்கள், சமாளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது, உயர்கல்வி அமைச்சு !  

குறிப்பாக விலை உயர்வு காரணமாக பாதிப்புறும் உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கானச் செலவுகளை அது மேற்கோள் காட்டியது. 

அது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சு சொன்னது.

-- 

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்! 

நிச்சயமற்ற உலகப் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிரதமர் DSAI அவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்

வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

-- 

பஹாங், Bentong-கில் 7 ராணுவ பயிற்சி வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் corporal அதிகாரி ஒருவரை விசாரிக்க சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

-- 

ஜொகூர் சிகாமாட் சாலை விபத்தில் சம்மந்தப்பட்ட டிரெய்லர் ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியாகியுள்ள நிலையில், அந்நிறுவனம் மீது தணிக்கை மற்றும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது,  போக்குவரத்து அமைச்சு. 

அச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். 

-- 

கெடா குவாலா மூடா அருகே உள்ள கடற்கரையில் படகு ஓட்டிக் கொண்டிருந்தபோது, பலத்த அலைகள் தாக்கியதில் 20 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

-- 

RAAGA Aaha Siranta Isai!