
சிலாங்கூர், Seri Kembangan-னில் நேற்று மாலை வாக்கில் தீப்பிடித்த காடு ஒன்றில், தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது!
ஏறக்குறைய 15 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீடித்த அத்தீ இன்று அதிகாலையில் அணைக்கப்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்தது.
அச்சம்பவத்தில் உயிருடற்சேதம் ஏதுமில்லை.
சம்பந்தப்பட்ட பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், அது பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்படும் என்றும் அத்துறை கூறியது.
-
Facebookகிலும் Thread தளத்திலும் அல்குரான் புனித நூலை அவமதித்ததாக கூறப்படும் நபரை தேடும் பணிகள் தீவிரமாகியுள்ளன!
அதற்காக சமூக ஊடக நிறுவனங்களுடனும் காவல் துறையுடனும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
-
உலகளவில் எரிசக்தி விலை அதி வேகமாக உயர்ந்து வரும் நிலையில், நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைக்க உதவ சில நடவடிக்கைகளை பரிசீலிக்கிறது மனிதவள அமைச்சு!
தனியார் துறைகளும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை விரிவுப்படுத்துவதும் அதிலடங்கும்.
-
உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன அமைச்சின் உணவு வங்கி திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 11 லட்சம் வீடுகள் நன்மையடைந்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் திருச்சியில், ஆரம்பப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 57 வயது ஆசிரியரையும், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தலைமை ஆசிரியரையும் போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!
பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், அப்பள்ளியின் முன் பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, மணப்பாரை மகளிர் போலீசார் அவ்விருவரையும் கைது செய்தனர்.