Skip to main content
செய்தி | வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் ஒத்திவைக்கப்படாது !

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், வீடமைப்பு ஊராட்சி  அமைச்சின் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் ஒத்திவைக்கப்படாது ! 

இதுவரை, தங்களின் எந்தவொரு திட்டத்தையும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் அமைச்சர் கூறுகிறார் 

அவை பெரிய அளவிலான திட்டங்கள் அல்ல; மக்கள் நல திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. 

நிச்சயமற்ற உலகப் பொருளாதார சூழலால் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, அனைத்து பெரிய அளவிலான திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் DSAI முன்னதாக அறிவித்திருந்தார். 

--

மலாக்காவில், HALAl  சர்ச்சையில் சிக்கிய இரண்டு உணவகங்களின் வணிக உரிமங்களைத் திரும்பப் பெற வேண்டிய அவசியமில்லை. 

Halal விதிமுறை பின்பற்றப்படாத குற்றத்திற்கு, அந்நிறுவனங்களின் Halal சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டது போதுமானது என மாநில மூத்த செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

-- 

இதனிடையே, மலாக்கா நீர் விநியோகத் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. 

அங்கு, தண்ணீர் விநியோகம் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிய மாநில அரசு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியது. 

-- 

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் நிலவினாலும், இவ்வாண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகளை மலேசியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-- 

பிரபல செய்தி நிருபர் Datuk Karam Singh Walia, இன்று அதிகாலை தனது 67 வது வயதில் காலமானார்.  

அவர் அண்மைய காலமாக கல்லீரல் புற்றுநோயால் அவதியுற்றூ வந்தார். 

தூய்மைக்கேடு, பொதுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் முக்கியத்துவம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதில், துணிச்சலாக செயல்பட்ட முக்கிய ஊடகவியலாளராக Karam Singh Walia நினைவுகூரப்படுகிறார். 

 

RAAGA Aaha Siranta Isai!