Skip to main content
சிலாங்கூரில் புதிய பொருளாதாரத் திட்டம் அறிமுகம் !

மத்திய கிழக்கு நெருக்கடியினால் நிலவும் பொருளாதார அழுத்தங்களைச் சமாளிக்க, சில முன்னெடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது, சிலாங்கூர் அரசு ! 

அத்திட்டத்தின் வழி, ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கப்படவிருப்பதாக, மாநில மந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari கூறினார். 

அது பெற்றொர்களின் சுமைகளை ஓரளவுக்கு குறைக்க உதவும் என அவர் சொன்னார். 

மேலும், அத்திட்டத்தில் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் உணவுக் கிடங்கு ஒன்றும்  அமைக்கப்படவுள்ளது. 

உணவு பற்றாக்குறை, பணவீக்க அழுத்தங்களைக் கட்டுபடுத்த அது உதவும் என Amirudin Shari கூறினார். 

அதோடு,தகுதியான 50,000 பேருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 100 ரிங்கிட் மதிப்பிலான  “Kita Selangor” பற்றுச்சீட்டும் வழங்கப்படவுள்ளது. 

உணவு பாதுகாப்பு, வாழ்க்கைச் செலவீனக் குறைப்பு, பொதுப் போக்குவரத்து பயன்பாடு, தேவைப்படுபவர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட உதவிகள் ஆகியவற்றை அத்திட்டம்  உள்ளடக்கியிருக்கும். 

-- 

பினாங்கில், சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக, தனியார் மருத்துவமனை ஒன்றின் உணவத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

-- 

சிலாங்கூர் ஷா ஆலாமில் தண்ணீர் தொட்டியில் நாய்க்குட்டியை மூழ்கடிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை காவல் துறை  நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. 

-- 

நெகெரி செம்பிலான் சிரம்பானில்  கடந்த ஜனவரி மாதம், பொது மருத்துவமனை ஒன்றில் 15 வயது நோயாளி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்தை, 59 வயதான dialysis நோயாளி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். 

-- 

RAAGA Aaha Siranta Isai!