Skip to main content
சிலாங்கூரில் தேசிய புகைமூட்ட நடவடிக்கை திட்டம் !

 

சிலாங்கூர் அரசு, தேசிய புகைமூட்ட நடவடிக்கைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது !

Johan Setia, Banting, கிள்ளான், ஷா அலாம் உள்ளிட்ட இடங்களில், காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்.

திறந்த வெளியில் குப்பைகள் அல்லது கழிவுகளை எரிப்பதைத் தடுக்க, குடியிருப்பு, வர்த்தக மற்றும் தொழிற்சாலை பகுதிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தீ மூட்டுவோருக்கு, 25-ஆயிரம் முதல் ஒரு மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறீயீடு 200-ரை எட்டினால், சிலாங்கூரில் அனைத்து பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்களை கட்டாயமாக மூட உத்தரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, Johan Setia மற்றும் ஷா அலாமில், API குறியீடு, 150-க்கும் மேல் பதிவாகியுள்ளது.

----------

இதனிடையே, நாடு முழுவதும் புகைமூட்டம் காரணமாக, காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், 2026 தேசிய தினக் கொண்டாட்டங்களின் அளவு மற்றும் நடைபெறும் இடத்தை மாற்றுவது குறித்து, அரசாங்கம் விரைவில் முடிவு செய்யும் !

சில தரப்புகளுடன் கலந்தாலோசித்தப் பின்னரே,  அது குறித்து முடிவெடுக்கப்படும் என, தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.

Dataran Putrajaya-வில் நடைபெறும் அக்கொண்டாட்டமும், Dataran Merdeka-வில் நடைபெறவுள்ள தேசிய தினத்துக்கு முந்தைய EVE நிகழ்ச்சியும் மறுபரிசீலனை செய்யப்படும்.

---------

மற்றொரு பக்கம், மலேசியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் எல்லை தாண்டிய புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த, இந்தோனேசியாவுக்கு உதவ மலேசியா முன்வந்துள்ளது !

இந்தோனேசிய வான்பரப்பில், செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள, மலேசியா தயாராக இருப்பதாக, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு தெரிவித்துள்ளது.

El Niño பருவத்தால், இந்தோனேசியாவில் நீடிக்கும் வறட்சியான வானிலை காரணமாக, காட்டுத் தீ மற்றும் சதுப்பு நிலத் தீ அதிகரித்துள்ளன.

---------

இவ்வேளையில், நாட்டில் 10 பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது !

அவற்றில், கோலாலம்பூர், நெகிரி செம்பிலானும் அடங்கும்.

அப்பகுதிகளில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு, 130-க்கும் மேல் பதிவாகியுள்ளது.

---------

இந்தோனேசியா மேடானில், போதைப்பொருள் கலந்த வேப்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் 22 வயது மலேசியரும், அவரது 35 வயது இந்தோனேசிய காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர் !

RAAGA Aaha Siranta Isai!