Skip to main content
சிறார் இணைய பாதுகாப்பு: ஆசியான் நாடுகள் கைகோர்க்க வேண்டும்!

 

 

சிறாரை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்!

சட்டங்களும் இணையத்தை அணுகும் வழிமுறைகளும் நாட்டைப் பொறுத்து வேறுபட்டிருந்தாலும், ஒத்துழைப்பு முக்கியம் என வலியுறுத்துகிறது தொடர்புத்துறை அமைச்சு.

பிள்ளைகளை இணையத்தின் அபாயத்திலிருந்து பாதுகாப்பது ஒரு கூட்டு முயற்சியாகும்.

அதற்கு அண்டை நாடுகள் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், அதன் மூலம் ஆக்ககர தாக்கங்களும் உண்டாகும் என அவ்வமைச்சு கூறியது.

----- 

சிலாங்கூர் டெங்கிலில் கடந்த திங்கட்கிழமை பள்ளியில் மூச்சுத்தினறலால் உயிரிழந்த ஒன்றாம் ஆண்டு மாணவியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது கல்வியமைச்சு!

 

மனநல ஆதரவு வழங்குவது உட்பட, அக்குடும்பத்தின் நலனைப் பேணுவதில் அவ்வமைச்சு கவனம் செலுத்துகிறது.

 

அச்சம்பவம் தொடர்பான விசாரணை காவல் துறையிடம் விடப்பட்டுள்ளது.

 

------ 

 

மேக விதைப்பு நடவடிக்கைகளை முக்கியமாக ஈரிடங்களில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஜொகூர் மாநில அரசு!

 

Yong Pengகிலிருந்து Machap செல்லும் பாதை மற்றும் Mersingகிலிருந்து Kota Tinggi செல்லும் பாதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

செயற்கை மழையைப் பொழிய வைத்து, புகைமூட்டத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக அது அமைகிறது.

 

-----

 

எல்லை கடந்து பரவும் புகைமூட்டம் குறித்து, இந்தோனேசிய தூதரகத்துக்கு மகஜர் ஒன்று அனுப்பப்படும்!

 

அதனை நாடாளுமன்ற தேர்வு செயற்குழு இன்று சமர்ப்பிக்கவிருப்பதாக, அதன் தலைசர் Suhaizan Kaiat தெரிவித்தார்.

 

------ 

 

ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் பொது கழிவறைகளை சரிச்செய்யவும் மேம்படுத்தவும் ஐந்து ஆண்டுகளுக்கு நூற்று ஐம்பது மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது!

 

ஆண்டுக்கு 30 மில்லியன் என, இவ்வாண்டு தொடங்கி 2030 வரை ஒவ்வொதுக்கீடு வழங்கப்படும் என, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு தெரிவித்தது.

 

RAAGA Aaha Siranta Isai!