Skip to main content
சிறார் பாலியல் துன்புறுத்தல் ; அதிகாரிகள் சவால் !

 

வெளிநாடுகளுடன் தொடர்புடைய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதில், அதிகாரிகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் !

அதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, குற்றத்திற்கான ஆதாரங்களைச் சேகரிப்பதுதான் என, மாலாயப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் Dr. Haezreena Begum தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக, சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள், மருத்துவ ஆதாரங்கள், மின் சாதனங்கள், இணையத் தளங்களின் பதிவுகள், தங்குமிட பதிவுகள், குடிநுழைவு பதிவுகள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், வெளிநாடுகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள், உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

எனவே, வெளிநாட்டு காவல்துறையினர், அரச தரப்பினர், சமூக நல அமைப்புகள் மற்றும் சில நேரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின் வாயிலான ஆதாரங்கள் விரைவாக நீக்கப்படலாம்; encrypted எனப்படும் மறைகுறியாக பாதுகாக்கப்படலாம்;

வெளிநாட்டு சேவையகங்களில் சேமிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அடையாளம் தெரியாத கணக்குகளுக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருக்கலாம் என அவர் மேலும் சொன்னார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தில், மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இதனை கூறினார்.

அந்தத் திருத்தங்களின் கீழ், மலேசியாவுக்கு வெளியே நடைபெற்ற, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், இந்தச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

---------

நெகிரி செம்பிலான் தேர்தல் தொடர்பில், நேற்று வரை, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நான்கு புகார்களைப் பெற்றுள்ளது !

அவற்றில் இரண்டு புகார்கள் வேட்பாளர்களை உட்படுத்தியது ; மற்ற இரண்டு, முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களித்தவர்களை உட்படுத்தியதாகும்.

பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டு வரும் விவகாரத்தில், ஊழல் அல்லது தேர்தல் சட்ட மீறல் இடம்பெற்றுள்ளதா என்பதை விசாரிக்க, விசாரணைக் கோப்பைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, நாளைய தேர்தலில் 15-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் கடமையில் இருப்பர்.

வாக்களிக்கத் தகுதிப் பெற்ற 8 லட்சத்துக்கும் அதிகமானோர், திறக்கப்பட்டிருக்கும் 401 வாக்களிப்பு மையங்களுக்குச் சென்று வாக்களிப்பர்.

காலை 8 மணி தொடங்கி, மாலை 6 மணி வரை, அம்மையங்கள் திறந்திருக்கும். 

RAAGA Aaha Siranta Isai!